பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
கடந்த வாரத்திற்கு முன்பு அனைத்து பார்வையாளர்களையும் கவந்த சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். நல்லா கன்டென்ட் கொடுத்துக்கிட்டு இருந்தவரை இப்படி வெளியே அனுப்பிட்டீங்களே? என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். வந்த நாளில் இருந்தே பாலாஜிக்கும் சுசித்ராவுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் அரங்கேறி வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக யாரும் இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கவில்லை.
இதையடுத்து நேற்று இந்த வார எலிமினேஷனுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றது. அதில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர்.
அதன்பின்னர் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக Topple card என்ற ஒன்றை அறிமுகம் செய்தனர். அதன் மூலம் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த அனிதா எஸ்கேப் ஆகி சம்யுக்தாவை கோர்த்துவிட்டுள்ளார்.
இதனிடையே மக்கள் அதிக எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வைத்திருந்த போட்டியாளர்கள் என்றால் அது ஜித்தன் ரமேஷும், நிஷாவும் தான்..
ஆனால் இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே பெரிதாக எதையும் செய்தது போல் தெரியவில்லை, அதுவும் குறிப்பாக நிஷா மீது அதிருப்தி அதிகரித்துள்ளது.
இதனால் இந்த வாரம் ஜித்தன் ரமேஷ், நிஷா இருவரில் யாராவது ஒருவரை ரசிகர்கள் வீட்டிற்குள் அனுப்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.