Jason Sanjay Directorial Debut SIGMA Movie Teaser Released
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள முதல் படம் சிக்மா. விஜய் சினிமாவைவிட்டு வெளியேறும் நிலையில், அவரது மகன் ஜேசன் விஜய் இப்போது சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இதே போன்று ஜேசன் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் சிக்மா. விஜய்யின் இடத்தை இப்போது அவரது மகன் ஜேசன் சஞ்சய் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23
Jason Sanjay Sigma Movie Teaser
சிக்மா படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், ஷீலா ராஜ்குமார், சம்பத் ராஜ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் தான் சிக்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் டீசரில் நீர், நிலம், காற்று மற்றும் பணத்திற்கு மட்டுமே நாளுக்கு நாள் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நாம் யார் என்பதற்கோ உறவுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. ஏன் என்ற கேள்வியோடு இந்த டீசர் நகர்கிறது. அதன் பிறகு ஆக்ஷன் காட்சிகள், கேம்ப்ளிங் ஆகியவற்றை கொண்டு கதை நகர்கிறது. உண்மையில் சிக்மா என்பதற்கு தனித்துவம் அல்லது சுதந்திரம் என்று பொருள்.
33
Lyca Productions Jason Sanjay Film
அதாவது, சமூக எதிர்பார்ப்புகளுக்கு அடிமையாகாமல் தனக்கென்று வாழ்பவர்கள். கூட்டத்தில் இருக்காமல் தனித்து இருப்பவர்களை குறிக்கிறது. ஆக்ஷன் கதை என்பதாலும், விஜய்யின் மகன் என்பதாலு, ஜேன்சன் சஞ்சய்யின் முதல் படம் என்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கையில் சினிமா சென்றால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று தெரிகிறது. சிக்மா டீசரே இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் போது படம் எப்படி இருக்கும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.