Vijay Reaction to actress Roja Mother in Law Character in Kavalan Movie : காவலன் படத்தில் தனக்கு மாமியாராக நடிக்க நடிகை ரோஜா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பின் போது அதற்கான காரணத்தை விஜய் கேட்டுள்ளார்.
Vijay Reaction to actress Roja Mother in Law Character in Kavalan Movie
Vijay Reaction to actress Roja Mother in Law Character in Kavalan Movie : நடிகை ரோஜா 90களில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கி ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். விஜய் நான் நடிப்பதை நம்பாமல் என்னிடன் நேரடியாக வந்து கேட்டார். ரோஜா மனம் திறந்து பேசியதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
தமிழ் சினிமாவில் அறிமுகம்:
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. அப்படத்துக்கு முன்னதாகவே சில தெலுங்கு படங்களில் அவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாதான் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. செம்பருத்தி ஹிட் அவருக்கு வாய்ப்புகளை கொட்டி கொடுக்க ஆரம்பித்தன. அப்படி அவர் ரஜினி, சரத்குமார் என பலருடன் சேர்ந்து நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார்.
36
ரோஜாவின் சினிமா பயணம்:
ரோஜா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிஸ் செய்யாமல் அனைத்திலும் சிறப்பாக நடிப்பார். கிளாமர், ஹோம்லி என எந்த ரோலையும் ஏற்று நடிக்கக்கூடிய திறமையை கொண்டவர். அவர் உழைப்பாளி, வீரா என வரிசையாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார்.தமிழில் எப்படி பிஸியாகவும் டாப் இடத்திலும் இருந்தாரோ அதேபோல் தெலுங்கிலும் மின்னினார். தனக்கேற்ற தனித்துவம் வாழ்ந்த கதைகளிலேயே தடுத்து வந்தார்.
46
திருமணம்:
நடித்தபோதே அதன் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியுடன் காதலில் விழுந்தார். இரண்டு பேரும் நீண்ட வருடங்கள் காதலித்தார்கள். பிறகு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பிலிருந்து ஒதுங்கிய ரோஜாவுக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் வந்தது. அதன்படி ஆந்திர அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
56
ரோஜாவின் அரசியல்:
தெலுங்கானாவில் ஒரு பிரபலமான கட்சியில் அரசியல்வாதியாக மாறினார் ரோஜா அதில் பல போராட்டங்களையும் சந்தித்து வெற்றி பெற்றார். படங்களில் அதிக வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து கட்சியிலேயே இருக்கத் தொடங்கினார். பல மேடையில் ஒரு சினிமா நடிகை தான் அரசியல்வாதி என்று பல பேச்சுக்களும் விமர்சனங்களும் பெற்று வந்தார் அதையும் மீறி வெற்றி பெற்று தெலுங்கானா தன்னை யார் என்று நிரூபித்தார் ரோஜா.
66
அம்மா கேரக்டரில் நடித்த ரோஜா:
அம்மா கேரக்டர் ரோல்களையும் ஏற்றார் ரோஜா. மாசாணி, சகுனி என தொடர்ந்து வில்லி கேரக்டரையும்,அம்மா கதாபாத்திரங்களில் நடித்த அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.தனியார் யூடியூப் சேனலிடம் பேசிய அவர், "நெஞ்சினிலே படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அப்போது அவர் ரொம்பவே ரிசர்வ்டு டைப்பாகத்தான் இருந்தார். அதற்கு பிறகு காவலன் படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்தேன். அந்த சமயத்தில் விஜய் என்னிடம் 'மேடம் நீங்கள் எனக்கு மாமியாரா நடிக்கிறீர்களா?' சும்மா சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். இதனை என்னால் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்களை இன்னமும் நாங்கள் ஹீரோயினாகத்தான் பார்க்கிறோம் என கூறினார். அப்போதிருந்து இனி அம்மா கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்" என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.