தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி... தலைவராக தேர்வு செய்யப்பட்டது யார் தெரியுமா?

First Published Nov 23, 2020, 11:58 AM IST

பல கட்ட சட்டப்போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

பல கட்ட சட்டப்போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
undefined
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
undefined
இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிட்டனர். தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
undefined
இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
undefined
வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து சில மணி நேரங்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை மட்டும் மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
undefined
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பிரபல இயக்குநரும், விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான டி.ராஜேந்தர் தோல்வி அடைந்துள்ளார்.
undefined
click me!