நடிப்பு, அழகு, உடற்தகுதி என அனைத்திலும் கலக்கி வரும் தமன்னாவுக்கு சமோசா என்றால் அத்தனை பிரியமாம். 'ஐ லவ் சமோசா' என்று தன் டீ-ஷர்ட்டில் அச்சடித்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு சமோசா மீது தீராத காதல் கொண்டவர். இந்த முக்கோண வடிவ உணவிற்காக எதையும் செய்வாராம். சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரே நேரத்தில் 5 சமோசாக்கள் வரை சாப்பிடுவேன் என்றும், அதனுடன் காஃபி சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். உருளைக்கிழங்கு கலந்த சாதாரண சமோசாக்கள் தான் தனக்குப் பிடிக்கும் என்றும், பன்னீர் அல்லது வேறு எந்த சேர்க்கைகளும் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
24
தமன்னாவுக்கு பிடித்த சமோசா
வீட்டில் சமோசா செய்து பார்த்ததில்லை என்றாலும், தியேட்டர்களில் கிடைக்கும் 'ஏ-ஒன்' நிறுவனத்தின் சமோசாக்களை அடிக்கடி சாப்பிடுவாராம்.
மும்பையில் உள்ள 'ஏ-ஒன்' நிறுவனத்தின் சமோசாக்கள் தான் தமன்னாவுக்கு மிகவும் பிடிக்குமாம். உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கலந்த சாதாரண சமோசாக்கள் தான் தனக்குப் பிடிக்கும் என்றும், பன்னீர் அல்லது கிஸ்மிஸ் சேர்த்த வித்தியாசமான சமோசாக்கள் தனக்குப் பிடிக்காது என்றும் கூறியுள்ளார். சமோசா வெறும் உணவு மட்டுமல்ல, தனக்கு அது ஒரு பேரார்வம் என்றும் கூறியுள்ளார்.
34
காஃபி மீது தனி பிரியம்
சமோசாவுடன் காஃபி குடிப்பதும் தமன்னாவுக்குப் பிடிக்குமாம். டிரை கப்புசினோ காஃபி, அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டை பொடி, பாதாம் பால் நுரை என தனக்குப் பிடித்த காஃபி ரெசிபியை விவரித்துள்ளார். சமோசாவிற்காக சண்டை கூட போடுவேன் என்று கூறியுள்ள தமன்னா, அதற்காக உயிரையும் கொடுப்பேன், உயிரையும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இறக்கும் போது கடைசியாக என்ன வேண்டும் என்று கேட்டால், சமோசா சாப்பிட்டு விட்டுத்தான் சாவேன் என்று கூறுமளவுக்கு சமோசா மீது தீராத காதல் கொண்டவர். 'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான தமன்னா, சமீபத்தில் 'ஸ்த்ரீ 2' படத்தில் இடம்பெற்ற 'ஆஜ் கி ராத்' பாடலில் அவரது நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.