'சூர்யா 40' ஹீரோயின் இவரா? அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்!

First Published Jan 28, 2021, 5:36 PM IST

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகி குறித்த அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகி குறித்த அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
undefined
'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, கடந்த 3 வருடங்களாக வெற்றி படம் கொடுக்க காத்திருந்த சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்து பல்வேறு பாராட்டுகளை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடி போடவுள்ள நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
undefined
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் தான், சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க ஏற்கனவே சில தகவல்கள் வெளிவந்தாலும் இதுவரை அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
undefined
இந்நிலையில் தற்போது, இந்த படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், சூர்யா 40 படத்தின் ஹீரோயின், பிரியங்கா அருள் மோகன் என்பதை உறுதி செய்துள்ளது.
undefined
ஏற்கனவே, இசையமைப்பாளர் டி.இமான் பிறந்தநாளில் , இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் தான், இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்கிற தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
undefined
சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என மாபெரும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜ், இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
மேலும் இந்த படத்தின் கதைக்கு பிரியங்கா அருள் மோகன் மோகன் கச்சிதமாக பொருந்துவார் என முடிவு செய்து அவரை கமிட் செய்து விட்டதாகவும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
undefined
சூர்யா ஏற்கனவே, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'பசங்க 2 ' படத்தில் நடித்திருந்தார். எனவே இவர்கள் கூட்டணி தற்போது இணைவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் இணைந்த, பிரியங்கா அருள் மோகன், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளது இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
undefined
click me!