நடிகர் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படத்தில் தற்போது சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவுக்கு வெற்றியை ருசிக்காவிட்டாலும், முதலுக்கு மோசமின்றி தப்பித்தது. இதற்கு அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. அப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இப்படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.
24
சூர்யா லைன் அப்
இதுதவிர நடிகர் சூர்யா மற்றுமொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது சூர்யாவின் 46வது படமாகும். அப்படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். அப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்து உள்ளது. அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். அப்படமும் இந்த ஆண்டு கோடையில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
34
மீண்டும் போலீஸாக நடிக்கும் சூர்யா
மேலும் சூர்யா கைவசம் மற்றுமொரு படமும் இருக்கிறது. சூர்யாவின் 47-வது படத்தை ஆவேசம் படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்குகிறார். அப்படத்தை ழகரம் நிறுவனம் சார்பாக சூர்யாவே தயாரிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அப்படத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதனால் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சிம்புவை வைத்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக இருந்த படத்தில் சிம்புவுக்கு பதில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அப்படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் உள்ளதால் அவர் விலகி அவருக்கு பதில் சூர்யா கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.