சூப்பர் ஹிட் சீரியலுக்கு திடீர் தடை போட்ட சன் டி.வி... சைடு கேப்பில் தட்டித்தூக்கிய முன்னணி சேனல்!

First Published Jan 11, 2021, 2:56 PM IST

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த சீரியலின் 2ம் பாகத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர். 

குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி எழுதிய நந்தினி மெகா தொடர் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
undefined
2017ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர் சன் டி.வி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. பிரம்மாண்ட அரண்மனை ஷெட், நடிகர், நடிகைகளுக்கு அசத்தல் காஸ்ட்யூம் என இந்தி தொடருக்கு இணையாக நந்தினி சீரியல் பேசப்பட்டது.
undefined
இந்த தொடரில் நாக கன்னியாக நித்யா ராம் நடித்திருந்தார். புடவையில் பட்டும் படாமல் கவர்ச்சி காட்டி நித்யா ராம் நடித்திருந்த கதாபாத்திரம் இளைஞர்கள் வரை சென்றடைந்தது.
undefined
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த சீரியலின் 2ம் பாகத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர். அதுவும் ஒன்று, இரண்டல்ல 50 எபிசோட்களை உருவாக்கியுள்ளனர்.
undefined
தற்போது குஷ்பு பாஜகவிற்கு மாறியுள்ள நிலையில் சன் தொலைக்காட்சி அந்த சீரியலை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் இருந்த குஷ்புவிற்கு பிரபல தொலைக்காட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
undefined
ஜீ தமிழ் சேனலிடம் குஷ்பு தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அவர்கள் டபுள் ஓகே சொல்லவே, நந்தினி 2 சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம்.
undefined
click me!