வருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட்... “லட்சுமி ஸ்டோர்ஸ்” நட்சத்திரா வெளியிட்ட வைரல் போட்டோஸ்...!

First Published | Jan 22, 2021, 6:58 PM IST

நட்சத்திரா நாகேஷ், ராகவ் சிவா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். 

கொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே பெரிய திரை, சின்னத்திரை என எவ்வித வித்தியாசமும் இன்றி பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அரங்கேறின.
2020ம் ஆண்டு சின்னத்திரையை பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள இந்த சூழ்நிலையில், சீரியல் நடிகை நட்சத்திரா தன்னுடைய வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
Tap to resize

தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த “நட்சத்திரா” சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது.
சின்னத்திரை, பெரியத்திரை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தன் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுவும் கோர்ட், சூட்டில் டிப் டாப்பாக ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
நட்சத்திரா நாகேஷ், ராகவ் சிவா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இதையடுத்து இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
விரைவில் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ள இந்த வருங்கால தம்பதியின் போட்டோஸுக்கு லைக்குகளுடன் சேர்த்து, திரைத்துறையினர், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!