கேம் சேஞ்ஜர் பிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்; புது குண்டை தூக்கிப்போட்ட தமன்!

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்ஜர் திரைப்படம் பிளாப் ஆனது ஏன் என்பது பற்றி இசையமைப்பாளர் தமன் பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SS Thaman says Shocking Reason for Game Changer Movie Flop gan

Game Changer Flop Reason : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் கேம் சேஞ்ஜர். இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்த இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படம் சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.100 கோடி செலவிடப்பட்டது. கேம் சேஞ்ஜர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது.

SS Thaman says Shocking Reason for Game Changer Movie Flop gan
Game Changer

கேம் சேஞ்ஜர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன் இது முதல்வன் பட ரேஞ்சுக்கு இருக்கும் என பில்டப் விடப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதுக்கா இவ்ளோ பில்டப் விட்டாங்க என கேட்கும் அளவுக்கு சொதப்பலான திரைக்கதையால் படுதோல்வி அடைந்தது கேம் சேஞ்சர் திரைப்படம். அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு, கேம் சேஞ்ஜர் படத்தால் ரூ.200 கோடி நஷ்டமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Game Changer: 'கேம் சேஞ்சர்' பட குழுவினர் மீது துணை நடிகர்கள் காவல் நிலையத்தில் புகார்! என்ன ஆச்சு?


Game Changer Flop

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பின் அப்படம் ஏன் சொதப்பியது என்பது பற்றி பலரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். அதன்படி இயக்குனர் ஷங்கர், இப்படத்திற்காக சுமார் 5 மணிநேரத்திற்கான காட்சிகளை படமாக்கிவிட்டாராம். ஆனால் அதில் இருந்து இரண்டரை மணிநேர காட்சிகள் தான் படத்தில் இடம்பெற வேண்டும் என்பதால், நிறைய நல்ல நல்ல சீன்கள் எல்லாம் எடிட்டிங்கில் தூக்கிவிட்டதே படத்தின் தோல்விக்கு காரணமாக ஷங்கர் கூறினாராம்.

Thaman about Game Changer Failure

இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் தமன், கேம் சேஞ்ஜர் பட தோல்விக்கு புதுக்காரணம் ஒன்றை கூறி இருக்கிறார். கேம் சேஞ்ஜர் படத்தில் பாடல்களும் தோல்வியை சந்தித்தன. அதற்கு பலரும் இசையமைப்பாளரை குத்தம் சொல்லி வரும் நிலையில், அவரோ, நடன இயக்குனரை குற்றம் சாட்டி இருக்கிறார். கேம் சேஞ்ஜர் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் ஹூக் ஸ்டெப் எதுவும் இல்லாததே அதன் தோல்விக்கு காரணம் என தமன் கூறி உள்ளார். கேம் சேஞ்ஜர் படத்தில் இடம்பெற்ற ஜருகண்டி பாடலுக்கு பிரபுதேவா தான் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருந்தார். ஒருவேளை அவரைத்தான் தமன் சூசகமாக சொல்கிறாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் பட நாயகி கியாரா அத்வானி கர்ப்பம்; குவியும் வாழ்த்துக்கள்

Latest Videos

vuukle one pixel image
click me!