ரஜினி மீது இவ்ளோ பக்தியா? சூப்பர்ஸ்டாருக்காக சிவகார்த்திகேயன் செய்த தியாகம்!

Published : Feb 21, 2025, 01:53 PM IST

சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே... அவர் சூப்பர்ஸ்டாருக்காக செய்த தியாகம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
ரஜினி மீது இவ்ளோ பக்தியா? சூப்பர்ஸ்டாருக்காக சிவகார்த்திகேயன் செய்த தியாகம்!
Sivakarthikeyan, Rajinikanth

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக உருவெடுத்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மதராஸி திரைப்படம் உருவாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனனும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். பிஜு மேனனுக்கு இது ஒன்பதாவது தமிழ் படம். வித்யுத் ஜமால், விக்ராந்த், ருக்மிணி வசந்த் இவங்கல்லாம் படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறாங்க. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

24
Madharasi

மதராஸி திரைப்படத்திற்கு முதலில் ஹண்டர்னு தான் டைட்டில் வைக்கலாம்னு இருந்தார்களாம். ஆனா அதே பேர்ல ரஜினிகாந்தோட வேட்டையன் (ஹண்டர்னு அர்த்தம்) இருக்கறதால சிவகார்த்திகேயன் வேணாம்னு சொல்லிவிட்டாராம். ரஜினிகாந்த் மேல இருக்கற மரியாதையோடு அவருடைய தீவிர ரசிகன் என்கிற காரணத்தாலும் அந்த டைட்டிலை விட்டுக்கொடுத்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதனாலதான் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்தின் டைட்டிலை மதராஸி என மாற்றிவிட்டாராம். மதராஸி ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சந்தானத்தால் இத்தனை சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்தாரா சிவகார்த்திகேயன்?

34
Parasakthi

இதுதவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்கிற திரைப்படமும் தயாராகி வருகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். மேலும் இதில் ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரது 100வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் பராசக்தி திரைப்படம் உருவாகிறது.

44
Amaran

முன்னதாக மேஜர் முகுந்த் வரதராஜனோட வாழ்க்கையை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். இப்படம் அண்மையில் 100வது நாள் வெற்றி விழாவை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உங்கள் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர இதை செய்வேன்; சிவகார்த்திகேயன் அறிக்கை!

Read more Photos on
click me!

Recommended Stories