ரசிகர்களை வைப்பில் வைக்க பிளான்: ஜன நாயகன் படத்துக்கு போட்டியா வரும் பராசக்தி இசை வெளியீடு!

Published : Dec 04, 2025, 03:52 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

PREV
17
இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது படம்:

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மேலும் சினிமா துறையில் தன்னுடைய திறமையைவெளிப்படுத்தி வருகிறார். 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று வரையில் தன் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். 2015 இல் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இவ்வாறாக இவர் கடந்து வந்த பாதையில் இரண்டு தேசிய விருதுகளையும் ,பிலிப் பேர் விருது மூன்றையும் வென்றுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக உள்ள பராசக்தி திரைப்படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு நூறாவது திரைப்படம் ஆகும்.…

27
நடிகர் விஜய்க்கு 50 நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 100

2016 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் சமந்தா ராதிகா எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தெறி' ஆகும். இந்தத் திரைப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நன்கு நடித்திருப்பார். இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடலாக கொடுத்திருப்பார் இந்த திரைப்படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாசுக்கு 50-வது திரைப்படம் ஆகும். இசையமைப்பாளர் ஜி வி பிரகாசும் இயக்குனர் அட்லியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.

37
சிவகார்த்திகேயனுக்கு 100வது திரைப்படம்:

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து தன்னுடைய நகைச்சுவை திறனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கால் பதித்தார். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் காமெடியனாக தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். இவருடைய திறமையை பார்த்த இயக்குனர் பாண்டியராஜன் மெரினா திரைப்படம் மூலம் இவரை கதாநாயகனாக மெரினா திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். 

47
கேடி பில்லா கில்லாடி ரங்கா

கேடி பில்லா கில்லாடி ரங்கா. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படம் மூலம் இவரை நல்ல கதாநாயகனாக காண்பிக்க இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது... தன்னுடைய திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை அமரன் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலை தந்தது. இவ்வாறாக பல படங்களில் நடித்து தன் முகத்தை தமிழக மக்களுக்கு நல்ல நடிகனாக பதிவு செய்து கொண்டிருக்கிறார். டான் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் சுதா கொங்ரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகும் பராசக்தி திரைப்படம் இயக்குனர் ஜி வி பிரகாசுக்கு நூறாவது திரைப்படம் ஆகும்.

57
சில்வர் ஜூப்ளி சிவகார்த்திகேயன்

டான் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக உள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி உலக அளவில் திரையரங்கில் வெளியாகிறது. இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25 வது திரைப்படம் ஆகும். இதனால் திரைத்துறையில் சில்வர் ஜூப்ளியை பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அரசியல் களத்தில் இந்திய எதிர்ப்பு போராட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டுள்ளது. அதை மையமாகக் கொண்டு நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து இந்த பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாது நடிகர் ஜெயம் ரவி நடிகர் அதர்வா ஆகியோரும் நடத்துனர். இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது..

67
இசை அசுரன் ஜிவி பிரகாஷ்; பராசக்தி இசை வெளியீட்டு விழா

டான் பிக்சர் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் வெளியீட்டில் இயக்குனர் சுதா கொங்கர இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக உள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்ததிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. பராசக்தி திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியானது. இரண்டு பாடல்களும் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களும் ஜனவரி 4 தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீடு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக 14ஆம் தேதி வரையில் பராசக்தி படத்தின் வைப்பிலேயே ரசிகர்களை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

77
நடிகர் சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர்

ஜி வி பிரகாஷ் இசையும் ஒன்று சேர்ந்து பராசக்தி படத்தை வெற்றி பெற செய்வார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டா போட்டி

ஜனவரி 9ஆம் தேதி நடிகர் விஜய் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகிறது.இந்த திரைப்படம் நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாகும். நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது இந்த இரு திரைப்படமும் பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு கிடைக்க உள்ளது எந்த திரைப்படம் இதில் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் முடிவு செய்வார்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories