தலைவர் 169-ல் சிம்பு, எஸ்.கே.... நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே!! இருவரும் என்ன செய்யப்போறாங்க தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Feb 14, 2022, 05:33 AM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 (thalaivar 169) படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

PREV
15
தலைவர் 169-ல் சிம்பு, எஸ்.கே.... நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே!! இருவரும் என்ன செய்யப்போறாங்க தெரியுமா?

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

25

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில்  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார்,  கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் (mysskin) என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.

35

இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன் (Nelson). தற்போது விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.

45

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர்கள் சிம்புவும், சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

55

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் சிம்பு (simbu) இப்படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories