இதல்லவா பிரெண்ட்ஷிப்... 24 வருட நண்பனுடன் பிறந்தநாள் கொண்டாடிய SK..! வைரலாகும் போட்டோஸ்

Published : Feb 18, 2026, 02:02 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 41வது பிறந்தநாளை, அவருடைய 24 வருட நண்பன் உடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
14
Sivakarthikeyan Celebrate 24 years of Friendship

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் அடுத்த படமான சேயோன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கிராமத்து நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். இப்படம் சிவகார்த்திகேயனின் 26வது படமாகும்.

24
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

சேயோன் படத்தில் மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. அப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சந்தோஷ் நாராயணன் சிவகார்த்திகேயனுக்கு என்னென்ன மாதிரியான பாடல்களை கொடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனும், சந்தோஷ் நாராயணனும் கல்லூரி பருவ நண்பர்களாம்.

34
24 வருட நட்பு

அவர்கள் இருவரும் திருச்சியில் ஒன்றாக கல்லூரி படித்திருக்கிறார்கள். இவர்களுடன் கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜும் ஒரே வகுப்பில் படித்திருக்கிறார். இதில் அருண்ராஜா காமராஜ் உடன் பல்வேறு படங்களில் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் சந்தோஷ் நாராயணன் உடன் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றாததால், இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதே பலரும் அறிந்திடாத விஷயமாக இருந்தது. அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் கல்லூரி காலகட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

44
கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்

அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளை தன்னுடைய நண்பன் சந்தோஷ் நாராயணன் உடன் தான் கொண்டாடி இருக்கிறார். இது வெறும் பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், சனா மற்றும் எஸ்.கே.வின் 24 வருட நட்பின் கொண்டாட்டமாக இருந்ததாக குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியும் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories