நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம். மேலும் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்கிற அப்டேட் வெளியாகி இருக்கிறது.
24
STR 49 பட இசையமைப்பாளர்
அதன்படி குட்டி அனிருத் என கொண்டாடப்படும் சாய் அபயங்கர் தான் சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். இவர் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் ஆவார். இவர் இசையமைத்த சுயாதீன ஆல்பங்களான கச்சி சேரா மற்றும் ஆசை கூட ஆகிய பாடல்கள் வைரல் ஹிட் அடித்தது. இதையடுத்து அனிருத்திடம் சில படங்களில் பணியாற்றிய சாய் அபயங்கர், தற்போது இசையமைப்பாளராக கோலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.
இவர் தமிழில் இசையமைக்க கமிட்டான முதல் படம் பென்ஸ், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 45 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருந்தார் அவர் விலகியதை அடுத்து அந்த வாய்ப்பு சாய் அபயங்கருக்கு சென்றது.
44
குட்டி அனிருத்
பின்னர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் படத்திற்கும் சாய் அபயங்கரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளார்களாம். அனிருத்துக்கு அடுத்து கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது சாய் அபயங்கர் தான். அதன்காரணமாகவே அவரை குட்டி அனிருத் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சிம்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.