silambarasan TR : நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு... திடீர் மோதலால் பரபரக்கும் கோலிவுட்

Ganesh A   | Asianet News
Published : Mar 24, 2022, 12:29 PM ISTUpdated : Mar 24, 2022, 01:02 PM IST

silambarasan TR : முன்னாள் காதலர்களான நயன்தாரா - சிம்பு இடையே திடீரென ஏற்பட்டுள்ள மோதல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
silambarasan TR : நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு... திடீர் மோதலால் பரபரக்கும் கோலிவுட்

சிம்புவுடன் பிரேக் அப்

வல்லவன் படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் ம்ட்டுமே இந்த காதல் நீடித்த நிலையில், இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர். இதையடுத்து இயக்குனர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, அவருடன் சில வருடங்கள் நெருங்கிப் பழகி வந்தார். இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

24

விக்கி உடன் காதல்

இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, 3-வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இன்றளவும் இவர்களது காதல் தொடர்ந்து வருகிறது. இருவருக்குமிடையே நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

34

ரிலீசுக்கு தயாரான காத்துவாக்குல ரெண்டு காதல்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

44

போட்டியாக களமிறங்கும் சிம்பு

இந்நிலையில், இப்படத்துக்கு போட்டியாக தற்போது சிம்புவும் களமிறங்கி உள்ளார். சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா படமும் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாகும். வழக்கமாக தனது படங்களின் அப்டேட்டில் நயன் செண்டிமெட்டை தொடர்ந்து வரும் சிம்பு, தற்போது நயன்தாரா படத்துக்கு போட்டியாக களமிறங்கி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Pushpa 2 : புஷ்பா 2-விலும் ஐட்டம் சாங்... சமந்தா நோ சொன்னதால் பிரபல கவர்ச்சி நடிகையை களமிறக்கும் அல்லு அர்ஜுன்

Read more Photos on
click me!

Recommended Stories