முன்னாள் காதலன் சிம்பு படத்தில் நயன்தாரா...? தீயாய் பரவும் செய்தியால் தூக்கத்தை தொலைத்த விக்னேஷ் சிவன்...!

First Published | Dec 31, 2020, 4:58 PM IST

நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'வல்லவன்' படத்தில் நடிக்கும் போது காதலித்து வந்தனர்.
திரையுலகமே பேசும் படி, நெருக்கமாக வளர்ந்த இவர்களது காதல் ஒரு கருத்து வேறுபாடு முற்றி, இருவரும் பிரியும் நிலை உருவானது.
Tap to resize

காதலர்களாக இருந்து பிரிந்து விட்டாலும், இருவருக்கும் இடையில் தற்போது வரை நல்ல நட்பு உள்ளது.
இதன் காரணமாகவே, சுமார் 10 ஆண்டுகள் கழிந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'இது நம்ப ஆளு' படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.
இந்நிலையில் மீண்டும் பிரபல தேசிய விருது இயக்குனர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள், உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாத நிலையில், மூன்றாவது முறையாக சிம்பு - நயன்தாரா ஜோடி இணைவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
பழைய காதலனுடன் நயன் ஜோடி போடுவதை தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!