பெங்காலி நடிகையை கரெக்ட் பண்ண கமல் செஞ்ச வேலையை பார்த்தீங்களா..! பல வருட சீக்ரெட்டை உடைத்த ஸ்ருதி

Published : Aug 27, 2025, 01:21 PM IST

நடிகர் கமல்ஹாசன் பெங்காலி மொழியை கற்றுக் கொண்டதற்கான உண்மையான காரணத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
14
Kamal Haasan - Aparna Sen Love Story

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ரஜினிகாந்துடன் 'கூலி' படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார் ஸ்ருதி. கூலி பட புரமோஷனின் போது, நடிகை ஸ்ருதிஹாசன் பல தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக தனது தந்தையும், மூத்த நடிகருமான கமல் ஹாசன் பெங்காலி மொழியைக் கற்றுக்கொண்டதன் ரகசியத்தை கூறினார். அவர் அந்த மொழியைப் படங்களுக்காக கற்றுக்கொள்ளவில்லை என்றும் அதன் பின்னணியில் ஒரு லவ் ஸ்டோரி இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

24
கமலின் காதலை போட்டுடைத்த ஸ்ருதி

அதில் ஸ்ருதி ஹாசனிடம் சத்யராஜ் பேசும்போது, உனது தந்தையைப் போலவே நீயும் பல மொழிகளைக் கற்றுக்கொண்டதற்காக அவரைப் பாராட்டினார். அதேபோல் கமல் ஹாசன் ஒரு பெங்காலிப் படத்தில் நடித்ததாகவும், அதற்காக அந்த மொழியைக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார் சத்யராஜ். அப்போது குறுக்கிட்ட ஸ்ருதி, தனது தந்தை படத்திற்காக பெங்காலி கத்துக்கல, பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல் கொண்டதால் அந்த மொழியைக் கற்றுக்கொண்டதாக ஸ்ருதி கூறினார்.

34
காதலுக்காக பெங்காலி கற்ற கமல்

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், 'அவர் ஏன் பெங்காலி கற்றுக்கொண்டார் தெரியுமா? அந்த நேரத்தில் அவர் அபர்ணா சென்னை காதலித்தார், அவரைக் இம்பிரஸ் பண்ணவே அவர் பெங்காலி கற்றுக்கொண்டார். படங்களுக்காக அவர் கற்றுக்கொள்ளவில்லை' என்று ஸ்ருதி கூறினார். கமல் ஹாசன் இயக்கிய 'ஹே ராம்' படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலையும் ஸ்ருதி பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால் அப்படத்தில் நடித்த ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்தை அபர்ணா சென் நினைவாக அவர் எழுதியதாகவும், அதனால் தான் அவர் பெங்காலி பேசும் பெண்ணாக நடித்திருந்ததாகவும், அவருக்கு அபர்ணா என பெயரிடப்பட்டதாகவும் ஸ்ருதி கூறினார்.

44
அபர்ணா சென் யார்?

அபர்ணா சென் பெங்காலி சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், மேலும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். ஒன்பது தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார், 1987 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அபர்ணா சென், பாலிவுட்டின் பிரபல நடிகை கொங்கனா சென் சர்மாவின் தாயார். நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்திருந்தது அனைவருக்கும் தெரியும். அவர் வாணி கணபதி, சரிகா ஆகியோரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அதேபோல் நடிகை கெளதமி உடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்தார். இந்த வரிசையில் அபர்ணா சென்-ஐ அவர் காதலித்தது தற்போது ஸ்ருதிஹாசன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories