shilpa shetty divorce : சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாரான நடிகை..ஆபாச வீடியோ விவகாரம்..36 கோடியா?

Kanmani P   | Asianet News
Published : Feb 09, 2022, 02:30 PM IST

shilpa shetty divorce  : ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றிய ஷில்பா ஷெட்டி, கணவ்ர் பெயரில் இருந்த பண்ணை வீட்டையும் தனது பெயருக்கு மாற்றியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது..

PREV
19
shilpa shetty divorce  : சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாரான நடிகை..ஆபாச வீடியோ விவகாரம்..36 கோடியா?
samantha

சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி...  காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

29
samantha

கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்து ரசிகர்கள் மனதை உடைத்தனர்..

39
dhanush family

18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த மாதம் பிரிந்து வாழப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

49
dhanush family

இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும் அரசல்புரசலாக பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

59
shilpa shetty Image

நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழில் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

69
shilpa shetty Image

ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஓட்டல்கள், தங்க வர்த்தகம் என பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

79
shilpa shetty Image

சமீபத்தில் மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின் பேரில் ராஜ் குந்த்ராவை கடந்தாண்டு ஜூலை மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு மாத சிறைவாசத்துக்கு பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

89
shilpa shetty Image

ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சமயத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என வெளியான தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார். ஆனால் தற்போது மீண்டும் அதே விவாகரத்து சர்ச்சை கிளம்பி உள்ளது. ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வேகமாக பரவ, அவரது சமீபத்திய நடவடிக்கைகளே காரணம். 

99
shilpa shetty Image

ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுதவிர கிணாரா பீச் அருகில் உள்ள பண்ணை வீட்டையும் அவர் ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி இருக்கிறார். இருவரும் பிரிந்து போகும் எண்ணத்துடனே இருப்பதால் தான் தற்போது சொத்து பிரிப்பு நடப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Read more Photos on
click me!

Recommended Stories