தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அப்படத்தின் மூலம் மீண்டும் கிராமத்து நாயகனாக மாறி இருக்கிறார் எஸ்.கே. அந்த வீடியோ செம டிரெண்டிங்கில் உள்ளது.
24
சின்னத்திரை டூ சினிமா
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி, அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் காமெடியனாக திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் முழுநேர ஹீரோவாக உருவெடுத்தார். பின்னர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டாக்டர், டான், மாவீரன், பராசக்தி என தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்ந்துள்ளார் சிவா.
34
தயாரிப்பாளராகவும் ஜொலிக்கும் எஸ்.கே
இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். கனா, கொட்டுக்காளி போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வந்த படங்கள் தான். அடுத்ததாக தாய்கிழவி என்கிற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். அப்படம் பிப்ரவரி 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி உள்ளார். அப்படத்தை பார்த்து பிடித்துப் போன பின்னர் தான் தற்போது தனது நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளார் எஸ்.கே.
சிவகார்த்திகேயன் தற்போது அதிக மார்க்கெட் உள்ள ஹீரோவாக பார்க்கப்படுகிறார். அவரது படங்கள் அசால்டாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன. இதனால் படத்துக்கு படம் அவருக்கான சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.50 முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதனால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.130 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக சென்னையில் ஒரு ஆடம்பர பங்களா உள்ளது. இவரிடம் மினி கூப்பர், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.