நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!

Published : Dec 18, 2025, 05:29 PM IST

Selvaraghavan Emotional Post about Life Pain: விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் இயக்குநர் செல்வராகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாமி மீதே வெறுப்பு வரும் அளவிற்கு எல்லாமே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

PREV
18
Tamil director Selvaraghavan emotional Post

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது வாழ்க்கையின் வலிகளை தத்துவங்களாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தான் இப்போது சோஷியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. செல்வராகவன் தமிழ் சினிமா துறையில் பல படங்களை இயக்கியுள்ளார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார்.

28
Tamil director Selvaraghavan emotional status

இதன் மூலமாக தனது திறமையை தமிழ் திரையுறுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். தனது தம்பியான தனுஷை வைத்து இதில் பாதி படங்கள் இயக்கியுள்ளார். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். வழக்கமான கதைக்களம் இல்லாமல் புதிய படிப்பை உருவாக்கியவர். காதல் அறிவியல், அரசியல் போன்ற கதைக்களம் கொண்ட படத்தினை இவர் உருவாக்கியுள்ளார்.

தான் இயக்கிய புதுப்பேட்டை படத்தின் மூலம் சோனியா அகர்வாலை காதலித்து இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு குடும்பப் பிரச்சினையின் காரணமாக இருவரும் 2009ல் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு செல்வராகவன் தனிமையிலிருந்து வந்தார். அதன் பிறகு தான் கீதாஞ்சலியை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

38
Selvaraghavan life advice stay calm

மயக்கம் என்ன படத்தின் படப்பிடிப்பில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்திருந்தவர் கீதாஞ்சலி. அவரை பிடித்து போக, அவர் மீது காதல் கொண்டு இருவரும் காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டனர். செல்வராகவனுக்கு கீதாஞ்சலி இரண்டாவது மனைவி. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு பெண் இரண்டு மகன்கள். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கிடையே ஏதோ பிரிவு ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் செல்வராகவனின் புகைப்படங்களை கீதாஞ்சலி நீக்கியது தான். இதே போன்று செல்வராகவனும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

48
Selvaraghavan Gitanjali Divorce News

கீதாஞ்சலி தனது கணவரான செல்வராகவனின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். தற்போதைய சினிமா வட்டாரத்தில் காதல் பிரிவு என்றால் போட்டோக்களை நீக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது கீதாஞ்சலியும் தனது கணவரான செல்வராகவனின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனை பார்த்த நெடிசன்கள் ஒருவேளை இருக்குமோ என்று கவுண்டமணி பாணியில் "ச்சே ச்சே" என்று பதிவிட்டு மீம் போட்டு வருகின்றனர்.

58
Selvaraghavan Gitanjali Divorce News

செல்வராகவன் பேட்டி ஒன்றில் தனது மன வலியுடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார். நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம் என்று மன வலியுடன், மழை உலைச்சலால் பேசியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதற்கும் இப்போது கீதாஞ்சலி தனது கணவரின் புகைப்படங்களையும் நீக்கியதையும் வைத்து பார்க்கையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

68
Selvaraghavan Gitanjali Raman Separation,

போட்டோக்களை நீக்குவது விவாகரத்தை குறிக்கிறது

இதை வைத்து பார்க்கையில் மனைவி கீதாஞ்சலி போட்டோக்களை நீக்குவது விவாகரத்தை குறிக்கிறது போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். ஆனால் கீதாஞ்சலி தனது instagram பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்று தான் வைத்திருக்கிறார். அதனால், விவாகரத்து இருக்கா இல்லையா என்ற குழப்பம் நெட்டிஷன்கள் இடையே ஏற்பட்டு வருகிறது.

78
Selvaraghavan Cryptic Tweet

இந்த நிலையில் தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் செல்வராகன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்க்கையின் வலிகளை தத்துவங்களாக பதிவு செய்திருக்கிறார். அதாவது, உண்மையில் சுற்றியிருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்பவர்கள் போன்று தோன்றும், சுவாமி மீதே வெறுப்பு வரும். தினமும் உனக்கு பூஜைகள் செய்தேனே எனக்கு ஏன் இந்த நிலைமை என்று எண்ண தோன்றும், நீயெல்லாம் கடவுளா? எல்லாமே தவறாக நடப்பது போன்று தோன்றும். 

88
Selvaraghavan Emotional Post,

அப்போது நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். அதாவது, அந்த காலகட்டத்தில் அமைதி தான் சிறந்த மருந்து. அதுவும் சில காலம் தான். பொறுமையாக இருந்துவிடுவது நல்லது. பெரும் மலை பனியாய் போகும். எல்லாமே சரியாகிவிடும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தான் இப்போது சோஷியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் என்ன பிரச்சனை? திடீரென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்க என்ன காரணம் என்று பல கோணத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories