Scene vs Mookuthi Amman 2 : தீபாவளி ரேஸில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? 4 நாள் வசூல் நிலவரம் இதோ

Published : Nov 10, 2026, 08:46 AM IST

Scene vs Mookuthi Amman 2 Box Office : சூர்யா நடித்த சீன் மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
சீன் vs மூக்குத்தி அம்மன் பாக்ஸ் ஆபிஸ்

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான 'சீன்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லன் ஆகியோரின் சிறப்பான நடிப்புதான் படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாஸ் ஆக்‌ஷன், நகைச்சுவை, த்ரில்லான தருணங்கள் என அனைத்தும் கலந்த முழுமையான என்டர்டெய்னர் படமாக இது உருவாகியுள்ளது.

25
வெற்றிநடைபோடும் சீன்

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். டிஎஸ்பி இம்பராஜ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் சூர்யா ரசிகர்களை கவர்ந்துள்ளார். சிறந்த காட்சிகளும் சுஷின் ஷ்யாமின் பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. சூர்யா, நஸ்லன், நஸ்ரியா நசீம் ஆகியோருடன் ஆனந்த் ராஜ், லால், ராஜ் பிரியன் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'ரோமாஞ்சம்', 'ஆவேஷம்' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளப் படங்களுக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் முதல் தமிழ்ப்படம் 'சீன்' ஆகும். மலையாளத்தில் கவனம் ஈர்த்த ஜித்து மாதவன்-சுஷின் ஷ்யாம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதும் இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

35
சீன் வசூல் எவ்வளவு?

பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இப்படம் பெரும் சாதனையை படைத்து வருகிறது. வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் 149.55 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. இதில் நேற்று மட்டும் இந்தியாவில் 21.25 கோடியும், ஓவர்சீஸில் 5 கோடியும் வசூலித்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் ரூ.17.85 கோடியும், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ரூ.3.40 கோடியும், இப்படம் வசூலித்திருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக 4 நாட்களில் இந்தியாவில் ரூ.98.05 கோடியும், வெளிநாடுகளில் ரூ.51.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

45
மூக்குத்தி அம்மன் 2 பாக்ஸ் ஆபிஸ்

மறுபுறம் தீபாவளி வெளியீடாக வந்த, சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2 - மகாசக்தி' திரைப்படம் தியேட்டர்களில் படிப்படியாக வசூலில் முன்னேறி வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.16.32 கோடி வசூலித்துள்ளது. இதன் உலகளாவிய வசூல் 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் நேற்று மட்டும் ரூ.5.15 கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸ் ஆனதில் இருந்து அப்படத்திற்கு கிடைத்த அதிகப்படியான வசூல் இதுதான்.

55
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு

வேல்ஸ் இன்டர்நேஷனல் பேனரில் டாக்டர். ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுந்தர் சி கதை எழுதி இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். குஷ்பு சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, கருடா ராம், அபினயா, ஸ்ருதி எஸ்., சிங்கம்புலி அண்ணாவி, வி.ஆர். சுவாமிநாதன், சிவகுமார் எஸ்., சுனில் வர்மா இண்டுகுரி, வர்ஷினி வெங்கட், பழ கருப்பையா, ஆனந்த அதிஷ்ட லட்சுமி, நிதின் சத்யா, டெப்லினா சக்கி ஆகியோர் மகாசக்தியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories