சீனாவை எதிர்க்கும் விதத்தில் துணிந்து முடிவெடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து

First Published Jun 21, 2020, 4:06 PM IST

 சீன செயலியை எதிர்க்கும் விதமாக டிக் டாக் செயலியில் இருந்து இவர் வெளியேறி, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி.

கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் அத்து மீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
undefined
இந்த மோதலில் சீனாவைச் சேர்ந்த 43 வீரர்கள் மரணமடைந்ததாக கூறப்பட்டாலும் சீனாவின் அத்துமீறல் தான் இந்திய வீரர்களில் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.
undefined
இந்த நிலையில் இந்தியா முழுவதும் சீனாவுக்கு எதிராக பலர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இனிமேல் சீன நாடு தயாரிக்கும் பொருட்களை, வாங்கவோ, விற்கவோ மாட்டோம் என்றும், இதன் மூலம் சீனா பொருளாதார ரீதியில் பாதிப்பை சந்திக்கும் என்றும் தங்களுடைய காரணத்தை ஆணித்தனமாக முன் வைத்து வருகிறார்கள்.
undefined
இந்த நிலையில் காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்த சாக்ஷி அகர்வால் டிக் டாக் செயலியில் இருந்து விலகியுள்ளார்.
undefined
இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 16 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடியவர். சீன செயலியை எதிர்க்கும் விதமாக டிக் டாக் செயலியில் இருந்து இவர் வெளியேறி, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி.
undefined
டிக்டாக்கில் இவருக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்த போதிலும், தான் ஒரு இந்திய குடிமகளாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிக்டாக்கில் இருந்து விலகுவதாகவும், சீனாவின் பொருட்களை இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்றும், சீன பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
undefined
இவரின் இந்த செயலுக்கு பலர் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!