கழுத்தை விட்டு கழட்ட மாட்டேன் - தாலி விஷயத்தில் பிரியங்கா சங்கர் எடுத்த அதிரடி முடிவு!

Published : Oct 06, 2025, 04:34 PM IST

Robo shankar wife Priyanka: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மரணத்தை தொடர்ந்து, பிரபலம் ஒருவர் பிரியங்கா சங்கர் குறித்து கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

PREV
17
சளைக்காத முயற்சி:

தமிழ் சினிமாவில் சளைக்காமல் முயற்சி செய்து... பல போராட்டம் மற்றும் சவால்களை கடந்து வெற்றிவாகை சூடுபவர்கள் ஒருசிலர் மட்டுமே. அப்படிப்பட்ட ஒரு பிரபலம் தான் ரோபோ சங்கர். கூட்டத்தோடு கூடமாக நடிக்க வாய்ப்பு கேட்டு நடித்த இவரின், விடாமுயற்சி தான் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு என்ட்ரி பாஸ்ஸாக அமைந்தது.

27
வெள்ளித்திரையில் குவிந்த வாய்ப்பு:

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில், தன்னுடைய எதார்த்தமான காமெடியாலும்... மிமிக்கிரி திறமையாலும் பல ரசிகர்களை சிரிக்க வைத்தார். இவருக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு காரணமாக விஜய் டிவி இவரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி கொண்டது. ஒரு கட்டத்தில், ரோபோவின் திறமைக்கு சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. காமெடியனாக மட்டும் நடிக்காமல், அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரங்களும் நடித்தார்.

37
மஞ்சள் காமாலை:

விஜய், அஜித், தனுஷ், லெஜெண்ட் சரவணன் என பலருடன் நடித்த ரோபோ சங்கருக்கு, இவருக்கு இருந்த குடி பழக்கம் உடல்நிலை மோசமடையவும், மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படவும் காரணமாக அமைந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன் சாவின் விளிம்பிற்கே சென்ற இவரை அதில் இருந்து மீட்டு கொண்டுவந்தது அவரின் மகள் இந்திரஜாவும், மனைவி பிரியங்காவும் தான்.

47
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ:

இதன் பின்னர் மீண்டும் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க துவங்கிய ரோபோ ஷங்கருக்கு கடந்த மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் என உடல்நல குறைவு ஏற்பட, அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகே உள்ள மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்ற நிலையில்.... ஆரம்பத்தில் இவரின் உடல்நிலை சீராக உள்ளதென்று மருத்துவர்கள் கூறிய நிலையில், பின்னர் இவரின் சிறுநீரகம், கல்லீரல் போற உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக கூறவே வேறுஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

57
எதிர்பாராத மரணம்:

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரோபோ ஷங்கர் செப்டம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மரணத்தை தொடர்ந்து இவரை பற்றிய பல தகவல்களை பிரபலங்கள் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ரோபோ ஷங்கருக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பரான நாஞ்சில் விஜயன் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது....

67
நாஞ்சில் விஜயன் பகிர்ந்த தகவல்:

இந்த விஷயத்தை நான் ரோபோ ஷங்கர் அண்ணாவின் மனைவி பிரியங்காவின் அனுமதி இல்லாமல் தான் சொல்கிறேன். ரோபோ ஷங்கர் அண்ணன் அவருக்கு கிடைத்த கலைமாமணி விருதில் கொடுக்கப்பட்ட பதக்கத்தை... ஒரு செயினில் அணிந்து எப்போதும் போட்டிருப்பார். குடும்ப கஷ்டம் காரணமாக அதை 3 மாதத்திற்கு முன் ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து விட்டனர். அவரின் மரணத்துக்கு பின் இதை அறிந்த அவரின் நண்பர்கள் தான் அந்த பணத்தை கொடுத்து செயினை மீது ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா அக்காவிடம் ஒப்படைத்தனர்.

77
பிரியங்காவின் முடிவு:

அந்த செயின் தான் இனிமேல் என் தாலி. அதை எப்போதும் நான் கழுத்தை விட்டு கழட்ட மாட்டேன் என கூறி தற்போது பிரியங்கா அக்கா அதை போட்டுள்ளார் என நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories