ilaiyaraja- Gangai Amaran : பிரிவும்... சந்திப்பும்!! ஒரே ஒரு போன் காலில் முடிவுக்கு வந்த 13 வருட விரிசல்

13 ஆண்டு காலமாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த இளையராஜாவும், கங்கை அமரனும் அண்மையில் மீண்டும் இணைந்தனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
 

Reason behind Ilaiyaraaja gangai Amaran reunion after 13 years

இசையுலகின் ராஜாவாக வலம் வருபவர் இளையராஜா (Ilaiyaraaja). இவரது இசைக்கு உலகமெங்கிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம்வந்தார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.

Reason behind Ilaiyaraaja gangai Amaran reunion after 13 years

பெரும்பாலும் கங்கை அமரன் இயக்கிய படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பாவலர் பிரதர்ஸ் (Pavalar Brothers) என அழைக்கப்படும் இவர்கள், தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தன. இவர்களுக்கிடையே சில நேரங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு இருந்தன. இதனை ஒரு பேட்டியில் கூட கங்கை அமரன் வெளிப்படையாக சொல்லி இருந்தார்.


இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட காரணம், சின்னராமசாமி பெரியராமசாமி என்கிற படம் தானாம். இப்படத்தின் தயாரிப்பின் போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் பேசிக்கொள்ளவே இல்லையாம். குடும்ப நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொண்டதில்லையாம்.

இவ்வாறு 13 ஆண்டு காலமாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த இளையராஜாவும், கங்கை அமரனும் அண்மையில் மீண்டும் இணைந்தனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்களது சந்திப்பை இருவரது குடும்பத்தினரும் கொண்டாடினர்.

இதுகுறித்து கங்கை அமரன் அளித்த சமீபத்திய பேட்டியில், “அண்ணன் இளையராஜா அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இதற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். உடனே போய் அவரை சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் அவரிடம் மனம்விட்டு பேசிக்கொண்டு இருந்தேன். 

இருவரும் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தோம். இனிமேல் நாங்கள் இருவரும் சந்தோஷமாக இணைந்திருப்போம். 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம் தான். இனிமேல் அதுபோன்று நடக்காது. எனக்கு இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்.... 'வெளுத்து கட்டிக்கடா' இசை தந்தைகளின் சந்திப்பை கண்டு மெய்சிலிர்த்த பிரேம்ஜி...

Latest Videos

click me!