Rashmika in RC15 : கெஸ்ட் ரோலா இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பளம் வேணும்.... ஷங்கருக்கே ஷாக் கொடுத்த ராஷ்மிகா

Ganesh A   | Asianet News
Published : Feb 09, 2022, 05:34 AM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
Rashmika in RC15 : கெஸ்ட் ரோலா இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பளம் வேணும்.... ஷங்கருக்கே ஷாக் கொடுத்த ராஷ்மிகா

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார். 

25

இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இதையடுத்து ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு, பூனேவில் துவங்கியது. 

 

35

இப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

45

இந்நிலையில், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகை ராஷ்மிகாவை படக்குழு அணுகியதாம். ராம்சரணை பேட்டி எடுக்கும் நிருபர் கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். படத்தில் 30 நிமிடம் வரும் இந்த காட்சிக்காக நடிகை ராஷ்மிகா ரூ.1 கோடி சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

55

புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் நடிகை ராஷ்மிகாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துவிட்டதாம். இதனால் வேறு வழியின்றி அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். நடிகை ராஷ்மிகா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories