உனக்கு சாப்பாடு கிடையாது வெளியே போக சொன்ன சிவாஜி - ரஜினி பட இயக்குனர் சொன்ன வார்த்தையால் வெடித்த பிரச்சனை!

Published : Apr 26, 2026, 04:06 PM IST

Shocking Clash with Shivaji Ganesan: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பி. வாசு, முன்னாள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பகிர்ந்த ஒரு பழைய அனுபவம் தற்போது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது.

PREV
14
பி. வாசு:

ஒரு நேர்காணலில் பேசிய பி. வாசு, தனது ஆரம்ப காலத்தில் சிவாஜி கணேசனுக்கு கதை சொல்ல சென்ற அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார். சிவாஜி அவர்களுக்கு கதை சொல்லப்போவதே பெரிய வாய்ப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றதாகவும், ஆனால் அந்த சந்திப்பு சில சங்கடத்தை தனக்கு தந்தாக கூறியுள்ளார்.

24
உனக்கு சாப்பாடு இல்ல

சிவாஜி அவர்கள் என்னை கதை சொல்ல மதிய உணவு நேரத்தில் தான் வர சொன்னார். சிவாஜி கணேசன் சாப்பிடும் நேரத்தில் கதை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வாசுவும் அங்கு இருந்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில், “எனக்கு மட்டும் சாப்பாடு வந்திருக்கு, உனக்கு சாப்பாடு இல்ல... நீ வெளியே போய் சாப்பிட்டு வா” என்று சிவாஜி கூறியுள்ளார்.

34
கதை கேட்க தயாராகியுள்ளார் சிவாஜி:

ஆனால் கதை சொல்லும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதால், எனக்கு சாப்பாடு வேண்டாம் சார்... நான் உங்களிடம் கதை கூறிவிட்டு சென்றே சாப்பிட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார். சிவாஜி பொறுமையாக சாப்பிட்டு முடித்ததும்... ஒரு கைலி மற்றும் பனியன் போட்டு கொண்டு கதை கேட்க தயாராகியுள்ளார்.

44
கசப்பான அனுபவம்

சிவாஜி கதை கூற சொல்லும் போது, அந்த அறையில் டிவியில் கிரிக்கெட் போட்டி ஓடிக்கொண்டிருந்ததால் கவனம் சிதறிய சூழல் இருந்ததாகவும், ரிமோர்ட் வேறு வேலை செய்யாததால் டென்க்ஷனான சிவாஜி சிகிரெட் பற்றவைக்க நினைத்தாராம். இதெல்லாம் வாசுவின் கவனத்தை சிதறடிக்க, சார் என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் ஒருபக்கம் டிவி பார்ப்பதாலும், சிகரெட் பிடிப்பதால் “உங்கள் கவனம் கதையில் இல்லை” என கூற... அதை கேட்ட சிவாஜி யாரை பார்த்து என்ன பேசுகிறாய் என்பது போல் கடுமையாக கோபப்பட்டதாகவும் பி. வாசு கூறியுள்ளார்.

இது ஒரு கசப்பான அனுபவம், என்றாலும் பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் ஆரம்ப கால சவால்களை தனக்கு புரிய வைத்ததாகவும் பி. வாசு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories