'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா? பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!

First Published | Jun 4, 2020, 6:03 PM IST

பிரபல இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல், நயன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து உண்மை தகவலை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை தயாரிக்க இருந்த பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
 

கடந்து இரண்டு நாட்களாக, சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவிய தகவலில் ஒன்று, நயன் - பிரபுதேவா இயக்கத்தில் இணைந்து நடிப்பது.
தன்னுடைய பழைய காதல் அனைத்தையும் மறந்து, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்... அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர், மீண்டும் பிரபுதேவாவுடன் இணைவாரா என்றும் பலர் எதிர்பார்த்தனர்.
Tap to resize

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் கட்ட நிதி திரட்டும் வகையில் எடுக்க இருந்த 'வெள்ளைராஜா கருப்புராஜா' படத்தை பிரபுதேவா இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தார்.
விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க இருந்த ’கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் பரபரப்பாக நடந்தபோது திடீரென இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் விஷாலுக்கு பதிலாக வேறு ஒரு பிரபல ஹீரோ நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியானது.
தீயாய் பரவிய இந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கருப்புராஜா வெள்ளை’ ராஜா படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அந்த படத்தை தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே இந்த படம் மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் இதில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மீண்டும் நயன் - பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக வந்த தகவல் முழுக்க முழுக்க வந்தந்தி என்பது தெரியவந்துள்ளது.

Latest Videos

click me!