Vijayakanth: பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே..? விஜயகாந்த் ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த பிரேமலதா!

First Published | Dec 25, 2021, 7:03 PM IST

கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth), நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வெளியானதில் இருந்து, மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்க்கலாம் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமான தகவலை வெளியிட்டுள்ளார் அவரது மனைவி பிரேமலதா (Premalatha Vijayakanth).

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக 'எங்கள் ஆசான்' படம் வெளியானது. இதை தொடர்ந்து தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வந்ததால், அவரால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போனது.  

பின்னர் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதை தொடர்த்து மீண்டும் மகனுடன் 'தமிழன் என்று சொல்லடா ' என்கிற படத்தில் நடிப்பார் என தகவல் வெளியான நிலையில், அந்த படத்தின் பணிகள் அப்படியே கை விடப்பட்டது.

Tap to resize

இந்நிலையில் நடிகர் விஜயகாந்துக்கு, கடந்த 2014ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், மனைவி, பிரேமலதா, மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்தார். இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் சமீபத்தில் கூட துபாய்க்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். எனவே முன்பை விட, நன்கு உடல் நலம் தெரியுள்ள விஜயகாந்த் விரைவில் ஒரு படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தில் தான் விஜயகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.

விஜயகாந்த் நடிப்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த செய்தியே  அவரது ரசிகர்களை உச்சாகமடைய வைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட, பிரேமலதா விஜயகாந்திடம்... மீண்டும் கேப்டன் படம் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், இந்த தகவலில் சற்றும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் விஜயகாந்த் படம் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் கூறிய இந்த பதில் விஜயகாந்த் ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

Latest Videos

click me!