கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த டியூட் படத்தின் 5ம் நாள் வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
உலகம் முழுவதும் 'டியூட் தீபாவளி' கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான 'டியூட்' திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்த இப்படம், 4 நாட்களில் 83 கோடி ரூபாய் உலகளாவிய வசூலை பெற்றுள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதன் மூலம், உலகெங்கிலும் தீபாவளிக்கு வெளியான இந்தியப் படங்களில் 'டியூட்' முதலிடம் பிடித்துள்ளது.
24
டியூட் தீபாவளி
முதல் நாளில் இப்படம் உலகளவில் 22 கோடி ரூபாய் வசூலித்தது. வயது வித்தியாசமின்றி அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெடி, எமோஷன், ஆக்ஷன், காதல், குடும்ப உறவுகள், நட்பு என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பேக்கேஜாக 'டியூட்' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அகன் என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனும், குறள் என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அதோடு, இதுவரை காணாத வித்தியாசமான தோற்றத்தில் அமைச்சர் அதியமான் அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.
34
வசூலை வாரிக்குவிக்கும் டியூட்
முந்தைய பிரதீப் ரங்கநாதன் படங்களைப் போலவே, 'டியூட்' படத்திலும் இளைஞர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அதே சமயம், குடும்ப உறவுகள், நட்பு, காதல் போன்றவை ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் இப்படத்தில் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரனால் காட்டப்பட்டுள்ளது. இதற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், இந்த தீபாவளிக்கு ஒரு பக்கா ஃபன் ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக டியூட் உள்ளது என்பதே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஃபேமிலி ஆடியன்ஸின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் டியூட் திரைப்படத்தின் 5ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்றும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தினம் என்பதால் டியூட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அக்டோபர் 21ந் தேதி மட்டும் இப்படம் தமிழகத்தில் ரூ.6.63 கோடி வசூலை வாரிக் குவித்து இருந்தது. உலகளவில் 10 கோடி வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இதனால் 5 நாட்கள் முடிவில் டியூட் திரைப்படம் ரூ.93 முதல் 95 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றோ அல்லது நாளையோ டியூட் திரைப்படம் 100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.