இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். பெண்களை அவமதிக்கும் வகையில் எந்தக் காட்சியும் உருவாக்கும் நோக்கம் எங்களுக்கில்லை என்றும், பார்வையாளர்களின் கருத்துகளை மரியாதையுடன் ஏற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்பட இயக்குநராக, சினிமா மக்களை மகிழ்விக்கவும், ஊக்குவிக்கவும், உணர்வுபூர்வமாக இணைக்கவும் வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது யாரையும் அசௌகரியமாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் உணரச் செய்யக்கூடாது. ‘பெத்தி’ படத்தின் சில காட்சிகள் குறித்து வந்த கருத்துகளை நாங்கள் கவனமாக எடுத்துக்கொண்டுள்ளோம். திரையிலும், திரை வெளியேயும் பெண்களுக்கு நான் எப்போதும் மிகுந்த மரியாதை கொடுத்து வந்துள்ளேன். எந்தப் பெண் கதாபாத்திரத்தையும் பொருளாக்கவோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கம் இல்லை. இருந்தபோதிலும், படத்தின் ஏதேனும் பகுதி அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மரியாதையுடன் ஏற்கிறோம்; எழுந்துள்ள விமர்சனங்களை புரிந்துகொண்டு மனமார்ந்த மன்னிப்புக் கோருகிறோம்.