பிரபல இசையமைப்பாளரை காதலித்து கரம்பிடித்த பறந்து போ பட நடிகை கிரேஸ் ஆண்டனி - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Published : Sep 10, 2025, 08:42 AM IST

பறந்து போ படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, தன்னுடைய நீண்ட நாள் காதலனை கரம்பிடித்துள்ளார்.

PREV
14
Grace Antony Marriage

ராம் இயக்கிய பறந்து போ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நேற்று தன்னுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு, சில மணி நேரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பகிர்ந்திருந்தார் கிரேஸ் ஆண்டனி. ஆனால், மணமகன் யார் என்பதையோ அவருடைய புகைப்படத்தையோ அவர் வெளியிடவில்லை. மணமகனின் முகத்தைக் காட்ட வேண்டும் என்று பலர் கமெண்ட் செய்து வந்தனர்.

24
கிரேஸ் ஆண்டனியின் 9 வருட காதல்

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருமண புகைப்படத்தை கிரேஸ் ஆண்டனி தற்போது வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கிரேஸ் அறிவித்துள்ளார். லேடி ஆஃப் டோலர்ஸ் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. ஒலி, ஒளி, கூட்டம் இல்லாமல் எங்கள் திருமணம் நடந்தது என்று கிரேஸ் ஆண்டனி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'ஜஸ்ட் மேரீட்' என்ற ஹேஷ்டேக்குடன் தாலியின் படத்தையும் பகிர்ந்துள்ளார். 9 ஆண்டுகால காதலுக்குப் பிறகு இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

34
கிரேஸ் ஆண்டனியின் திரைப்பயணம்

பரவரகத் ஹவுஸில் சிரியக் தாமஸ் மற்றும் ஷாஜி சிரியக் ஆகியோரின் மகன் ஏபி டாம் சிரியக். முளந்துருத்தி தெட்டாலிக்கல் ஹவுஸில் ஆண்டனி டி.ஜே. மற்றும் ஷைனி ஆண்டனி ஆகியோரின் மகள் கிரேஸ் ஆண்டனி. இருவரும் தற்போது கொச்சியில் வசிக்கின்றனர். கும்பளங்கி நைட்ஸ், ரோஷாக், பறந்து போ, நாகேந்திரனின் ஹனிமூன், அப்பன், நுணாக்குழி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் கிரேஸ் ஆண்டனி. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஹேப்பி வெட்டிங் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கிரேஸ்.

44
யார் இந்த ஏபி டாம் சிரியக்?

ஏபி டாம் சிரியக் ஒரு இசையமைப்பாளர், இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு மியூசிக் புரொடியூசராக பணியாற்றி இருக்கிறார். 2016 இல் வெளியான பாவாடா படத்திற்கு இசையமைத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். சமீபத்திய வெளியீடுகளான ஆஃபிசர் ஆன் டியூட்டி, நரிவேட்டை, லோகா மட்டுமின்றி சர்வதேச நெட்ஃபிளிக்ஸ் தொடர்களிலும் ஏபி டாம் பணியாற்றியுள்ளார். தற்போது கிரேஸ் ஆண்டனி, ஏபி டாம் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories