அடடா! இப்பவே கல்யாண கலை வந்துடுச்சே.... பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்தீங்களா???

First Published Nov 25, 2020, 1:16 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சித்ரா மணப்பெண் கெட்டப்பில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
undefined
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
undefined
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் சித்ராவிற்கு திருமணம் நடைபெற உள்ளது.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சித்ரா, அவ்வப்போது தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
undefined
அதுமட்டுமின்றி புடவை, நகைகள் என சகல விதமான விளம்பரங்களுக்கும் மாடலிங் செய்து வருகிறார். அந்த மாடலிங் போட்டோக்களையும் உடனுக்குடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
undefined
அப்படி உடல் முழுவதும் தங்க நகையால் அலங்கரிக்கப்பட்டு அழகு ததும்பும் மணப்பெண்ணாக சித்ரா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
பச்சை நிற ஜாக்கெட், மாம்பழ கலர் பட்டுப்புடவையில் தலை முதல் கால் வரை நகைகளால் அலங்கரிக்கப்பட்டு அழகு சிலையாக ஜொலிக்கும் சித்துவின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
மணப்பெண் கெட்டப்பில் முகம் முழுவதும் ஜொலிக்க அழகு புன்னகையுடன் அசத்தலாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜே சித்ரா.
undefined
பார்க்க பார்க்க கண்ணைப் பறிக்கும் சித்ராவின் இந்த அழகு போட்டோக்கள் லைக்குகளுடன் சேர்த்து பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.
undefined
அழகு தேவதையாய் ஜொலிக்கும் சித்ராவின் போட்டோக்களை பார்த்து கல்யாணத்திற்கு இன்னும் நாட்கள் இருந்தாலும், உங்களுக்கு கல்யாண பொண்ணு கலை வந்துடுச்சி என மனதார பாராட்டி வருகின்றன.
undefined
click me!