“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை....!

First Published | Nov 28, 2020, 2:15 PM IST

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் திடீரென அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஏராளமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது.
அண்ணன் - தம்பி குடும்ப சென்டிமெண்டை மட்டுமே வைத்துக் கொண்டு செம்ம சுவாரஸ்யமாக நகர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tap to resize

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கெளசல்யா செந்தாமரை. பூவே பூச்சூடவா சீரியலில் யுவராணிக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மறைந்த பிரபல நடிகரான செந்தாமரையின் மனைவியாவார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் கெளசல்யா செந்தாமரைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உதவி செய்யுமாறும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Latest Videos

click me!