30 வயதை கடந்த பின்பும், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை தமன்னா, மேக் இன்றி பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. மேக்அப் இல்லாமலும் இவங்க அம்புட்டு அழகு தான்.
நடிகை அசின், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழ், மலையாளம், இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதிகம் மேக்அப் போடுவதை விரும்பாத அசின், மேக்அப் இல்லாமலும் பேரழகு தான். திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு மொத்தமாக ஒதுங்கிய இவர், கணவர் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், மேக்அப் இல்லாமல் பார்க்க, நிறைய வித்தியாசங்களுடன் உள்ளார். இருப்பினும், துணிச்சலுடன் தொடர்ந்து மேக்அப் இல்லாமல் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
பாகுபலி நடிகை அனுஷ்காவின் மேக்அப் இல்லாத தோற்றம் பார்க்கவே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. இருப்புனும் இந்த புகைப்படத்தில் அவருடைய சிரிப்பு இவரை மென்மேலும் அழகாக காட்டுகிறது. மேலும் திரையுலகிலும் இனிமையான நடிகையாக அறியப்படுபவர் அனுஷ்கா.
நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து வரும் நடிகை சமந்தா, மேக்அப்போடு இருப்பதை விட மேக்அப் இல்லாமல் மிகவும் அழகாகவும் இளமையாகவும் தெரிகிறார் என்பதே ரசிகர்களின் கருத்து.
மிக குறுகிய காலத்தில், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இளம் நடிகை, ராஷ்மிகா மந்தனா... மேக்அப் இல்லாமல் கூட செம்ம அழகாக உள்ளார். மேலும் மேக்அப் போட்டு பார்ப்பதில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படம் நீண்ட காலமாகவே சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஆனால், தற்போது பார்ப்பதற்கு செம்ம ஸ்லிம்மாக மாறி, ஸ்டைலிஷாகவும் உள்ளார். இவருடைய மேக்அப் இல்லாத புகைப்படம் சில விமர்சனங்களை பெற்ற போதும், அழகை பெருகேற்றி... லேடி சூப்பர் ஸ்டாராக கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறார்.