அகாண்டா 2 தாண்டவம் டீசர் - சிவனாக மிரட்டிய பாலகிருஷ்ணா!

Published : Jun 09, 2025, 11:37 PM IST

Akhanda 2 Thaandavam Teaser : நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிவனாக பாலகிருஷ்ணா அசத்தியுள்ளார். தாண்டவம் ஆடுவது கூடுதல் சிறப்பு.

PREV
15
நந்தமுரி பாலகிருஷ்ணா - அகாண்டா 2 டீசர்

Akhanda 2 Thaandavam Teaser : பாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு கூட்டணியில் வெளிவந்த 'அகண்டா' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு பாலகிருஷ்ணா தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது பாலகிருஷ்ணா, போயபதி இணைந்து 'அகண்டா 2: தாண்டவம்' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் அட்டகாசமான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

25
பாலகிருஷ்ணா பிறந்தநாள்

செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பாலகிருஷ்ணாவின் பிறந்த நாள். இதையொட்டி, பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு போயபதி முன்கூட்டியே விருந்து வைத்துள்ளார். 'அகண்டா 2' படத்தின் அட்டகாசமான டீசரை வெளியிட்டுள்ளார். இதில் சிவன் அவதாரத்தில் பாலகிருஷ்ணா அசத்தியுள்ளார். வெளியான டீசர் பிரமிக்க வைக்கிறது.

35
நந்தமுரி பாலகிருஷ்ணா

'என் சிவன் அனுமதி இல்லாமல் எமனாலும் கண்ணை பார்க்க முடியாது. நீ பார்க்கிறாயா?. அப்பாவிகளின் உயிரை எடுக்கிறாயா?' என்று பாலகிருஷ்ணா பேசும் பவர்ஃபுல் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. இதில் பாலகிருஷ்ணா அசத்தியுள்ளார். காட்சிகளுக்கு ஏற்றவாறு அவர் பேசும் வசனங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன. ஆனால் பின்னணி இசை அவ்வளவு சிறப்பாக இல்லை. தமன் தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்தவில்லை.

45
அகாண்டா 2 டீசர்

டீசரில் பாலகிருஷ்ணாவின் ஆக்ஷன் வேற லெவலில் உள்ளது. காஷ்மீர் பனிப்பாறைகளின் பின்னணியில் டீசர் நகர்கிறது. அதில் சிவன் வேடத்தில் பாலகிருஷ்ணா அறிமுகமாகிறார். திரிசூலம் ஏந்தி, அச்சு அசல் பரமசிவனைப் போலவே காட்சியளிக்கிறார். பவர்ஃபுல் என்ட்ரியுடன் வாவ் சொல்ல வைக்கிறார். அதுமட்டுமல்லாமல், அப்பாவிகளின் உயிரை எடுக்கிறாயா என்று வில்லன்களை ஒரே அடியில் தூக்கி எறிகிறார்.

55
దసరా కానుకగా `అఖండ 2ః తాండవం` సినిమా

பாலகிருஷ்ணாவின் ஆக்ஷன் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்தப் படம் 'அகண்டா'வை விட சிறப்பாக இருக்கும் என்பதை டீசர் பார்க்கும்போது புரிகிறது. டீசரே இப்படி இருந்தால், படம் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணி எப்போதும் ஏமாற்றியதில்லை. இப்போதும் ஏமாற்றப் போவதில்லை என்பது புரிகிறது.

இந்தப் படத்தை பான் இந்தியா அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வெற்றி பெற்றால், பாலகிருஷ்ணாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று சொல்லலாம். ராம் ஆச்சண்டா, கோபி ஆச்சண்டா தயாரிக்கும் இந்தப் படம் தசரா பரிசாக செப்டம்பர் 25 ஆம் தேதி ரசிகர்கள் முன்பு வரவுள்ளது.

https://youtu.be/BU90JJ8u2bA

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories