மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

Published : Jun 11, 2023, 11:41 AM ISTUpdated : Jun 11, 2023, 11:46 AM IST

கமலின் மருதநாயகம், விஜய்யின் யோஹன், அஜித்தின் மிரட்டல் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்கள் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

PREV
117
மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த ஏராளமான திரைப்படங்கள் தடபுடலாக தொடங்கப்பட்டு, பல்வேறு விதமான பிரச்சனைகளில் சிக்கி பாதியிலேயே கைவிடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்த படங்களில் சிலவற்றை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

217

யோஹன் அத்தியாயம் ஒன்று

விஜய் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் தான் யோஹன் அத்தியாயம் ஒன்று. விண்ணைத்தாண்டி வருவாயா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கவுதம் மேனன் கொடுத்தபின்னர் அறிவிக்கப்பட்ட படம் தான் இது. இதற்காக போட்டோஷூட்டெல்லாம் நடத்தப்பட்ட நிலையில், இப்படத்தை பாதியிலேயே கைவிட்டனர்.

317

ஜக்குபாய்

பாபா படத்துடன் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்கிற தகவல் பரவலாக பேசப்பட்டு வந்த சமயத்தில் சர்ப்ரைஸ் ஆக வந்த அறிவிப்பு தான் ஜக்குபாய் படத்தின் போஸ்டர். ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாக இருந்த இப்படம் கைவிடப்பட்டதை அடுத்து, சரத்குமாரை வைத்து இப்படம் எடுக்கப்பட்டு தோல்வியை தழுவியது.

417

கெட்டவன்

வல்லவன் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கி நடித்த சிம்பு, அடுத்ததாக கெட்டவன் என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்து, அப்படத்திற்காக வித்தியாசமான கெட்-அப்பிலும் போட்டோஷூட் நடத்தினார். ஆனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

517

ஏசி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் தான் ஏசி. இப்படத்தில் அசின் நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன்பே இப்படம் கைவிடப்பட்டது.

617

மிரட்டல்

தீனா என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் காம்போ, இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருந்த திரைப்படம் தான் மிரட்டல். இப்படமும் அறிவிப்போடு நின்றுபோனது.

717

கான்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருந்த திரைப்படம் தான் கான். சிம்பு பட்டையெல்லாம் போட்டு பக்தி மயமாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரெல்லாம் வெளியிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன் இப்படம் கைவிடப்பட்டது.

817

கரிகாலன்

கண்ணன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடிக்க இருந்த திரைப்படம் கரிகாலன். கரிகால சோழனைப் பற்றிய வரலாற்று படமாக இது உருவாக இருந்தது. ஷூட்டிங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டாலும், இப்படம் பாதியில் கைவிடப்பட்டது.

917

மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்படம் அறிவிப்போடு ட்ராப் ஆனது.

1017

ராணா

ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாக இருந்த பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் தான் ராணா. இதில் ரஜினிக்கு வில்லன் வேடமும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் முதல்நாள் ஷூட்டிங்கின் போதே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அப்படத்தை கைவிட்டனர்.

1117

வேட்டை மன்னன்

சிம்பு - நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வேட்டை மன்னன். இதன் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துவிட்டாலும், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படத்தை பாதியிலேயே கிடப்பில் போட்டனர்.

1217

சென்னையில் ஒரு மழைக்காலம்

சூர்யா - அசினை வைத்து கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த திரைப்படம் தான் சென்னையில் ஒரு மழைக்காலம். இப்படம் அறிவிப்போடு நின்றுபோனதை அடுத்து, அதேகதையை திரிஷா மற்றும் வீராவை வைத்து எடுக்க திட்டமிட்டார் கவுதம், அப்படமும் கைவிடப்பட்டது.

1317

காங்கேயன்

அஜித் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் தான் காங்கேயன். இப்படமும் அறிவிப்போடு நின்றுபோனது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருந்தார்.

1417

சூதாடி

தனுஷும், வெற்றிமாறனும் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், அவர்கள் கூட்டணியில் டிராப் ஆன திரைப்படம் தான் சூதாடி. 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இப்படம் அப்படியே கைவிடப்பட்டது.

1517

தேசிய நெடுஞ்சாலை

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த மற்றுமொரு திரைப்படம் தேசிய நெடுஞ்சாலை. இப்படம் அறிவிப்போடு நின்றுபோனது. இதையடுத்து இப்படத்தை உதயம் என்.ஹெச்4 என்கிற பெயரில் சித்தார்த் நடிப்பில் வெளியானது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர் தான் இப்படத்தை இயக்கினார்.

1617

டாக்டர்ஸ்

தனுஷ் - செல்வராகவன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், அவர்கள் கூட்டணியில் உருவாகி ட்ராப் ஆன படமும் உண்டு. அதுதான் டாக்டர்ஸ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிப்பதாக இருந்தது.

1717

மருதநாயகம்

கமலின் கனவு திரைப்படம் தான் மருதநாயகம். இப்படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. இருப்பினும் இப்படத்திற்கான மவுசு இன்றளவும் குறைந்தபாடில்லை. இதன் தொடக்க விழாவில் கலைஞர் கருணாநிதி, எலிசபெத் ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

click me!

Recommended Stories