Madhampatti Rangaraj 2nd Marriage With Joy Crizildaa : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புதிய உச்சம் தொட்ட கோடீஸ்வரர் மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Madhampatti Rangaraj 2nd Marriage With Joy Crizildaa : சினிமாவாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி 2ஆவது திருமணம் என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலேயும் வசதி படைத்தவர்கள் என்றால் கூடுதல். அதாவது திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
26
ஜாய் கிரிசல்டா கர்ப்பம்
இந்த சூழலில் தான் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலமாக மிகப்பெரிய கோடீஸ்வரராக வளர்ச்சி அடைந்த பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது 2ஆவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த அவசர திருமணத்திற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது அவர் திருமணம் செய்து கொண்ட ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
36
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா
அதுவும் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தருணத்தில் சியான் விக்ரம் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ஒரு பிரபலமான படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. அந்த பாடல் என்னவென்றால் கல்யாணம் தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிகலாமா என்பதுதான். காலமும் அதற்கேற்ப தான் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் லிவிங் டூகெதரில் வாழ்ந்து கர்ப்பமாக இருக்கும் சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
46
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ்
அந்த வரிசையில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெற்றிருக்கிறார். ஆம், ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் இப்போது அவசர அவசரமாக 2ஆவது திருமணமும் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையில் கிசு கிசு பரவி வந்துள்ளது.
56
ஜாய் கிரிசல்டா மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம்
மேலும், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் என்று சோஷியல் மீடியா பகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜாய் கிரிசல்டா கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பேசி வந்துள்ளார். அப்போதும் அவர் மாசமாக இருந்துள்ளார். ஜாய் கிரிசல்டா தனது எக்ஸ் பக்கங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி கூறியிருந்தவை, மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே என்று குறிப்பிட்டு ஹார்டினையும் பதிவிட்டிருக்கிறார். இதே போன்று, உன் கழுத்தில் மாலையிட… உன்னிரண்டு தோளைத் தொட… என்ன தவம் செஞ்சேனோ என் மாமா… என்று பதிவிட்டிருந்த நிலையில் இன்று புதிதாக திருமண புகைப்படங்களை மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகிறார். கோவிலில் கவும் எளிமையாகவும் பாரம்பரிய முறையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
66
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்டா திருமணம்
ஜாய் கிரிசல்டாவும் சாதாரணவர் கிடையாது. சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவ்வளவு ஏன் தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். அதோடு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, புரூஸ் லீ, கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த நிலையில் கூடிய விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தலாம் என்று தெரிகிறது.