பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் உடன் விக்ரம் பட நடிகை காயத்ரி காதல்?

Published : Jul 26, 2023, 01:17 PM ISTUpdated : Jul 26, 2023, 01:19 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த நடிகை காயத்ரியின் காதலன் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
14
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் உடன் விக்ரம் பட நடிகை காயத்ரி காதல்?
Gayathrie Shankar

18 வயசு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இதையடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார் காயத்ரி.

24
Gayathrie Shankar

கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி. இப்படத்தில் இவரை விஜய் சேதுபதி கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி வேறலெவலில் வைரல் ஆனது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

இதையும் படியுங்கள்... டிடி ரிட்டர்ன்ஸ் முதல் மாமன்னன் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட்

34
Gayathrie Shankar, Aravind SA

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் காயத்ரியின் காதலன் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி அவர் அரவிந்த் சா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது. இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

44
Gayathrie Shankar

அரவிந்த் சா என்பவர் ஸ்டாண்ட் அப் காமெடி எனப்படும் தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் ஆவார். இவரும், காயத்ரியும் காதலித்து வரும் தகவல் கசிந்து வைரலாகி வந்தாலும், அதுகுறித்து இருவருமே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா - அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

click me!

Recommended Stories