டிசம்பர் 5 முதல் லாக்டவுன் கன்பார்ம்... ஆனால் அதற்கு முன் காத்திருக்கும் தரமான சம்பவம்..!

Published : Nov 22, 2025, 01:56 PM IST

டிசம்பர் 5-ந் தேதி முதல் லாக்டவுன் என்கிற அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், தற்போது அதைப்பற்றிய மேலும் ஒரு தரமான அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
14
Lockdown Movie Premiere on IFFI

கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக லாக்டவுன் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கி உள்ளன. அதற்கு முக்கிய காரணம் ஒரு திரைப்படம் தான். லாக்டவுன் என்கிற பெயரிலேயே தமிழில் ஒரு தரமான த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் குறித்த ரிலீஸ் தேதியை அண்மையில் அறிவித்த படக்குழு, அப்படத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

24
சர்வதேச திரைப்பட விழாவில் லாக்டவுன்

லாக்டவுன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் முன்னரே, கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. காலா ப்ரீமியர் என்கிற பிரிவில் இப்படம் திரையிட தேர்வாகி உள்ளது. சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த நவம்பர் 20ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் படமாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரையிடப்பட்டது. அந்த திரையிடலில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அமரன் படத்தை தயாரித்த கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

34
பாராட்டுக்களை பெறும் லாக்டவுன்

அமரனை தொடர்ந்து மற்றுமொரு தமிழ்படமான லாக்டவுன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பதால், அப்படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் லாக்டவுன் திரைப்படத்தை ஏ.ஆர்.ஜீவா இயக்கி உள்ளார். என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டிருக்கிறார்.

44
அனுபமாவின் லாக்டவுன்

லாக்டவுன் படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு கோலிவுட்டில் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் ஹிட் படங்கள் தான். 2025-ம் ஆண்டு தமிழில் மட்டும் அனுபமா பரமேஸ்வரன், டிராகன் மற்றும் பைசன் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அந்த வரிசையில் ஹாட்ரிக் ஹிட் படமாக வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள லாக்டவுன் திரைப்படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories