Published : Nov 12, 2019, 01:19 PM ISTUpdated : Nov 12, 2019, 01:20 PM IST
தஞ்சாவூரில் பிறந்த தமிழ் பெண்ணாண தன்சிகா, பேராண்மை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அரவான், பரதேசி போன்ற படங்களில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில், வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக கபாலி படத்தில் நடித்த மூலம், தன்சிகா மிகவும் பிரபலமானார். மாஞ்சாவேலி, நில் கவனி செல்லாதே, விழித்திரு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகை தன்ஷிகா. காவிரி பாயும் தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சிலம்பாட்டத்தை முறையாக பயின்றவர். கவர்ச்சியாக நடித்தால் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற விதியை உடைத்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். டுவிட்டரில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுபவர்களை கண்டித்த தன்சிகா, தமிழ் பெண் என்ற பெயரை காக்கும் விதமாக க்யூட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நீல நிற சுடிதாரில் தன்சிகா வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் இதோ....