Kiruthiga Udhayanidhi : முதன்முறையாக பிரபல மாஸ் ஹீரோவுடன் கூட்டணி அமைக்கும் கிருத்திகா உதயநிதி

Published : Feb 18, 2025, 11:01 AM IST

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா அடுத்ததாக இயக்க உள்ள தமிழ் படத்தில் பிரபல மாஸ் ஹீரோ நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
Kiruthiga Udhayanidhi : முதன்முறையாக பிரபல மாஸ் ஹீரோவுடன் கூட்டணி அமைக்கும் கிருத்திகா உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தை இயக்கிய கிருத்திகா, அதன்பின் சில ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து பேப்பர் ராக்கட் என்கிற வெப் தொடர் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த கிருத்திகா, பின்னர் முழுவீச்சில் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

24
இயக்குனராக பிசியாகும் கிருத்திகா

அந்த வகையில் அண்மையில் அவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் சேதுபதி; எந்த படம்?

34
கிருத்திகாவின் அடுத்த படம்

தியேட்டரில் ஹிட்டானதை தொடர்ந்து அண்மையில் ஓடிடியில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் அதிலும் அதிகம் பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்நிலையில், கிருத்திகா உதயநிதியின் அடுத்த பட ஹீரோ யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். கிருத்திகா சொன்ன கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க ஓகே சொல்லி உள்ளாராம் விஜய் சேதுபதி.

44
கிருத்திகா உதயநிதி படத்தில் விஜய் சேதுபதி

இதன்மூலம் விஜய் சேதுபதியும், கிருத்திகா உதயநிதியும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் என்கிற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர மிஷ்கின் இயக்கிய டிரெயின் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படத்தை முடித்த கையோடு கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  ஏழரை சனி புடிச்சிருக்கு; சினிமாவை விட்டு போக சொன்னாங்க! விஜய் சேதுபதி ஓபன் டாக்

Read more Photos on
click me!

Recommended Stories