முறியடிக்கப்படுமா?... “கே.ஜி.எஃப் 2” டீசர் படைத்த சாதனையை கேட்டு வாய் பிளக்கும் திரையுலகம்...!

First Published Jan 9, 2021, 5:56 PM IST

கே.ஜி.எஃப் 2 டீசர் படைத்துள்ள சாதனைகளை பார்த்து ஓட்டுமொத்த திரையுலகமே பிரம்மில் ஆழ்த்துள்ளது.

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
undefined
முதல் படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2ம் பாகம் தயாராகி வருகிறது. ராக்கி பாய் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு படக்குழுவினர் டிசம்பர் 8ம் தேதி காலை 10.18 மணிக்கு டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
undefined
ஆனால் அதற்கு முன்னதாகவே டீசர் சோசியல் மீடியாவில் லீக்கானதால் டிசம்பர் 7ம் தேதி இரவே டீசரை வெளியிடும் நிலைக்கு படக்குழு தள்ளப்பட்டது. இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த டீசர் என்பதால் கே.ஜி.எஃப் 2 டீசர் இரவில் வெளியான போதும் சில மணி நேரங்களிலேயே அசத்தலான பல சாதனைகளை செய்து வந்தது.
undefined
டீசர் வெளியாகி 24 மணி நேரம் ஆன நிலையில் 78 மில்லியன் பார்வையாளர்கள், 4.2 மில்லியன் லைக்குகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்திய திரையுலகில் இப்படியொரு சாதனையை எந்த டீசரும் 24 மணி நேரத்தில் படைத்தது கிடையதாம்.
undefined
தற்போது வரை 9 கோடி பார்வையாளர்களை கடந்து கே.ஜி.எஃப் டீசர் முன்னேறி வருகிறது. அனைத்து டீசர்களையும் பின்னுத்தள்ளி முதல் இடத்தில் உள்ள இந்த படத்தின் சாதனை முறியடிக்கப்படுமா? என திரையுலகினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
undefined
click me!