நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், சில தோல்விகளை சந்தித்தாலும், இன்று அனைத்தையும் தகர்த்தெறிந்து, முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கோலிவுட் திரையுலகை தாண்டி தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கைவசம் தமிழில் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்துள்ள இவர், இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ்... சேலையில் மயக்கும் புகைப்பட தொகுப்பு இதோ...