சிவசேனாவிற்கு எதிராக கங்கணம் கட்டும் கங்கனா... மகாராஷ்டிரா ஆளுநருடன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

Published : Sep 13, 2020, 08:05 PM IST

சுஷாந்த் சிங் மரணம், போதைப்பொருள் விவகாரம் என பல விஷயக்களிலும் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா அரசு தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். 

PREV
17
சிவசேனாவிற்கு எதிராக கங்கணம் கட்டும் கங்கனா... மகாராஷ்டிரா ஆளுநருடன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

சுஷாந்த் சிங் மரணம், போதைப்பொருள் விவகாரம் என பல விஷயக்களிலும் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா அரசு தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்ததால் கங்கனாவிற்கும் - சிவசேனாவிற்கும் இடையே மோதல் வெடித்தது. 

27

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. 

37

இதனிடையே  கங்கனா ரணாவத்தின் மும்பை இல்லத்தில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதையடுத்து, அதை மும்பை மாநகராட்சி இடித்து அகற்றியது. 

47

இது தொடர்பாக கங்கனா ரணாவத் காட்டமாக முதல்வர் உத்தவ் தாக்கரேயையும், மகாராஷ்டிரா அரசையும் விமர்சித்திருந்தார். மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையும் பெற்றுள்ளார். 
 
57

இந்நிலையில் இன்று நடிகை கங்கனா ரணாவத், தனது சகோதரி ரங்கோலியுடன் சென்று, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். 

67

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கங்கனா, எனக்கு நடந்த அநியாயங்களைப் பற்றி கவர்னரிடம் கூறினேன். அவர் தனது சொந்த மகளைப் போல் எனது குறைகளை கேட்டறிந்தார். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

77

இந்த விவகாரத்தில் கங்கனாவிற்கு பாஜக அரசு ஆதரவு அளிப்பதாகவும், அதனால் தான் அவர் வரம்பு மீறி முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பதாகவும் அக்கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் கங்கனா - ஆளுநர் இடையிலான இந்த திடீர் சந்திப்பு அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories