கடைசியில் காசு, பணம் கேட்டு மனு தாக்கல் செய்த ஜாய் கிரிசில்டா ; வெயிட்டிங்கில் மாதம்பட்டி ரங்கராஜ்!

Published : Oct 30, 2025, 07:11 PM IST

மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்திருந்த நிலையில் இப்போது தனக்கு மாதம் மாதம் ரூ.6.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

PREV
16
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா

கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தொடர்பான செய்திகள் தான் சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்திகளில் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், மாதம்பட்டி ரங்கராஜ் அந்தளவிற்கு பிரபலம். நடிகர் மட்டுமின்றி சமையல் கலைஞரும் கூட. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலம். பல பிரபலங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பலவிதமான டிஸஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

26
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா திருமணம்

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலானது. ஜாய் கிரிசில்டா தான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

36
குக் வித் கோமாளி சீசன் 6

அவர் பதிவிட்டு ஓரிரு மாதங்களுக்குள்ளாக மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே தன்னைப்பற்றி அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தை நாடினார் மாதம்பட்டி. ஆனால் அவருக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

46
ஜாய் கிரிசில்டா ரூ.6.50 லட்சம், சினிமா

இதனிடையே தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்செட் ஆன ஜாய் கிரிசில்டா, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில், புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவர் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார் ஜாய் கிரிசில்டா.

56
ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது முதல் மனைவியோடு மாதம் ரங்கராஜ் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரானார். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜாய் கிரிசில்டா மனு ஒன்றை அளித்துள்ளார்.

66
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா

அதில், தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில் என்னுடைய வேலையில் ஈடுபட முடியவில்லை. ஆதலால் என்னையும் வயிற்றில் வளரும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்றும், தனது இதர செலவுகளான வீட்டு வாடகை, மெடிக்கல் செலவு உள்பட அனைத்திற்கு மொத்தமாக மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். பலரும் இது குறித்து விமர்சனமும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories