Jana Nayaga Thiruvizha World Record : உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில், ஒரு லட்சம் டெசிபல் ஒலியெழுப்பி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'ஜன நாயகன் திருவிழா' உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற விஜயின் ஜன நாயகன் திருவிழாவில் விஜயின் வெறித்தனமான ரசிகர்கள் தன் அண்ணன், என் தலைவன், என் தளபதி, என் உயிர், என் ஹீரோ இன்னும் என்னவென்று எல்லாம் சொல்லலாம் என்று தெரியாமல் இருக்கும் உயிரினும் மேலான தளபதி ரசிகர்கள் உலகம் எங்கும் வந்து மலேசியாவில் ஆதரவு கொடுத்தனர்.
27
வாழ்க்கையில் பார்த்தது இல்ல....:
தளபதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஆடியோ திருவிழாவிற்கு பல நடிகர்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர் அதில் நடிகர் சுனில் தளபதி வெறித்தனமான விஜயின் ரசிகர்களைத் கண்டு மிரண்டுள்ளார் என்று கூறலாம். வாழ்க்கையில பார்த்ததே இல்லை இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது என்று நான் அதிர்ச்சியில் உள்ளேன் என்றெல்லாம் விஜய்யை பெருமிதப்படுத்தி அவர்களுடைய ரசிகர்களை பார்த்து பிரமித்துக் கூறியுள்ளார் எங்களுக்கு 5.1 மற்றும் 7.1 ரசிகர்கள் கூட்டமே தெரியும் ஆனால் இது சரிதிலேயே இல்லாமல் ஒரு லட்சம் டெசிபல் ரசிகர்களைக் கண்டு நான் பிரமிட் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
37
எங்கள அழ வச்சிட்டீங்க அண்ணா:
கடைசியாக இருந்த விஜயின் பேச்சு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கி இருந்தது. விஜய் பேசியபோது என் கடைசி படமான ஜனநாயகன் என்று சொல்லும் போதே ரசிகர்களின் மத்தியில் பெரும் சத்தம் எழுந்து விஜய்க்கு அவர்களுக்கு பெரும் சப்போட்டாக நாங்க இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ரசிகர்கள் தெரிவித்தார்கள். விஜயின் இந்த வார்த்தையை அவர் நடித்த திருப்பாச்சி இடம் பெற்றிருக்கும் பாடல்"என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்" என்னும் பாட்டை வைத்து அண்ணா அழாதீங்க அண்ணா. என்றெல்லாம் கூறி ரசிகர்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றனர். அந்தப் பாட்டிற்கு முன்பு விஜய்யின் தங்கச்சி "என் அண்ணே நிம்மதி இல்லாம போகுது"என்று கூறும் டயலாக் தற்போது மிகவும் ட்ரெண்டாக்கி வருகிறது.
47
தளபதி விஜயவே அலறவிட்ட ரசிகர்கள்:
விஜயின் கட்சியான தவெக கட்சியின் அடையாளப்படுத்தும் எந்தவித பொருளுக்கும்,கட்சி கொடிக்கு அனுமதி இல்லை என்று விஜய்க்கு கண்டிஷனை கொடுத்தார்கள் மலேசியா அரசு ஆனால் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு கட்சி கொடி கொண்டு வரக்கூடாது , கட்சி டி-ஷர்ட் துண்டு எதுவும் அணிந்து வரக்கூடாது என்று கண்டிஷன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்களோ தன் கைகளில் மின் விளக்கு பேண்டுகளாக அணிந்து வந்து முதல் ரோ வில் சிகப்பு நிறம் பேண்டுகளும் இரண்டாவது ரோவில் மஞ்சள் நிற பேண்டுகளும் அணிந்து வைத்து விஜயின் தவெக கட்சியின் கொடியை உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள். விஜயை சந்தோஷத்தில் மிரளவைத்தனர் ரசிகர்கள் .
57
லாஸ்ட் ஒன் டைம்:
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் விஜயனின் சினிமா வரலாறு இத்துடன் முடிவடைகிறது என்று கூறியுள்ளார் விஜய். மலேசியா தான் சினிமாவிற்காக ஏறும் கடைசி மேடை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் இதற்குப் பிறகு அவர் தமிழ்நாட்டில் அரசியல் மேடையில் தான் ஏறுவார் என்றும் தற்போது கூறி வருகின்றனர். இதுதான் இவருக்கு லாஸ்ட் ஒன் டைம் படம் நடித்ததாகவும் கூறப்பட்டு வருகிறது ரசிகர் மத்தியில் இந்த வார்த்தை மிகவும் பரவலாகி வேதனையுடனும் வருத்தத்துடனும் மற்றும் விஜயின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
67
ஒன் லாஸ்ட் டான்ஸ்:
விஜய் மலேசியாவின் ஜனநாயகன் ஆடியோ திருவிழாவிற்கு கிளம்பும்போதே லாஸ்ட் ஒன் டான்ஸ் என்னும் வார்த்தையை மிகவும் விரலாகி வந்தது. அதேபோல் விஜயின் மேடையில் தளபதி கச்சேரி என்னும் பாடலுக்கு டான்ஸ் ஆடினார் அதுவே அவரது லாஸ்ட் ஒன் டான்ஸ் என்று கூறப்படுகிறது.
77
மலேசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்:
அளவுக்கு அதிகமான ரசிகர்களை தன் விழாவிற்கு கூடியதால் மலேசியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் சாதனையை பிடித்துள்ளார் தளபதி விஜய். இது விஜய்க்கே ஆச்சரியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.