
ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள 2ஆவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் விஜய்யின் டான்ஸ் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அவரது கடைசி படமாக இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பேரே வரலாறு பாடல் குறித்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதைப் பற்றி பார்க்கலாம்.
பரா சக்தி ஆனாலும் சரி ஓம் சக்தி ஆனாலும் சரி எந்த சக்தியும் எங்க அண்ணனை ஒன்னும் செய்ய முடியாது: ஜனநாயகனுடன் போட்டி போடுவதற்காக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியிடுவதால் பராசக்தியை தோற்றடிப்பது போவதாக விஜயின் ரசிகர் தனது கமெண்ட்ஸ் மூலம் தெறிக்க விட்டுள்ளார் எந்த சக்தி வந்தாலும் எங்க அண்ணனை ஒன்னும் செய்ய முடியாது என்று.
வெறித்தனமான டான்ஸ்:
தான் சென்றாலே அது எங்க அண்ணன் விஜய் தான். இந்தப் பாட்டு அவருக்காகவே நாடி நரம்புகளில் உள்ள வெறித்தனத்தை இந்த பாடல் மூலம் காட்டியுள்ளார் அனிருத் என்று ஒரு நெட்டிசன் தளபதியின் வெறி எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு கமெண்ட் செய்துள்ளார்.
தியேட்டரே கிழிய போகுது
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் பாட்டின் மூலம் வெறித்தனமான பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாட்டி வைப்பு தாங்க முடியாமல் தியேட்டரே கிளிய போகுது என்று ஒரு நெட்டிசன் உடம்பு சிலிர்க்க வைக்கும் படி கமென்ட்சை பதிவிட்டுள்ளார்.
தளபதி என்பது வெறும் பெயர் இல்ல எங்கள் உயிர்:
தளபதி விஜயின் வெறித்தனத்தின் உச்சகட்டமான ரசிகர்களால் மட்டுமே இந்த மாதிரியான கமெண்ட்ஸ்கள் எழுத முடியும். உடம்பு முழுவதும் தளபதியின் வெறி ஊறிப்போன ஒரு நாள் மட்டுமே இந்த மாதிரியான கமெண்ட்ஸ்களை எழுத முடியும்.
தளபதி of ஸ்ரீலங்கா:
தளபதி இந்தியாவில் மட்டுமல்ல பிற உலகிலும் இருந்து வருகிறார்.தளபதி நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர் எங்கிருந்தாலும் தளபதிக்காக நாங்கள் ஒன்று சேர்வோம் என்று தனது அன்பை உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளனர்.
காலையில் தவெக சம்பவம், மாலையில் ஜனநாயகன் சம்பவம்:
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் அரசியல் பிரசாதத்தை தெறிக்க விட்டுள்ளார். மாலையில் கடைசி படமான ஜனநாயகன் பாடல் ரசிகர்களை தெறிக்க விட்டது.
விவேக்கின் வெறித்தனம்:
ஜனநாயகத்தின் இரண்டாவது பாடலான ஒரு பேரு வரலாறு என்னும் பாட்டு பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதால் விவேக் புகழ்ந்துள்ள ரசிகர்கள். யோ விவேக் நீ யார் யா எங்க அண்ணனுக்கே நீ எழுதி இருக்கியே ரொம்ப நன்றி என்று ஒரு ரசிகர் மனமார்ந்த வாழ்த்துக்களை விவேக்குக்கு தெரிவித்துள்ளார்.
Thursday இல்ல தளபதி day:
காலையில் ஈரோட்டில் தவெக தலைவர் தளபதி விஜயின் அதிரடி பேச்சும், மாலையில் ஜனநாயகத்தின் இரண்டாவது பாடலும் ஒரே நாளில் வெளியிட்டதால் இன்று தளபதிக்கான நாள் என்று கொண்டாடி வருகின்றனர்.
சூரியனுக்கு சொல்ல முடியாது! எங்கள் தளபதியை யாராலும் வெல்ல முடியாது:
சூரியன் என்ற வார்த்தை திமுக கட்சியை குறிக்கிறது ஆகையால் திமுகவை ஆட்சியில் வெற்றியை பெறுவாரா என்று சொல்ல முடியாது என்றும் தவெக தலைவர் தளபதி விஜய் வெல்ல முடியாது என்றும் தவெக தொண்டர் ஒருவர் வார்த்தையின் மூலம் சம்பவம் செய்துள்ளார் என்றே கூறலாம்.
விதியுடன் மோது தளபதியுடன் மோதாதே!
தைரியம் இருந்தால் விதியுடன் மோது என் அண்ணன் விஜயுடன் மோதாதே என்று ஒரு தளபதி விஜயின் ரசிகர் மற்றவர்களை அலற விட்டுள்ளார்.
இவரது ஆட்டத்தை களத்தில் பார்க்க விரும்புகிறேன்:
தளபதி விஜய் தற்போது வெளியே ஆகியுள்ள ஒரு பேர் வரலாறு பாட்டின் மூலம் வெறித்தனமான நடனத்தை ஆடியுள்ளார். ஒரு ரசிகர் நான் இவர் ஆட்டத்தை தேர்தல் களத்தில் பார்க்க விரும்புகிறேன் என்று ஆர்வத்துடன் கூறியுள்ளார்.
ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் வியூவர்ஸ்:
ஜனநாயகத்தின் இரண்டாவது பாடலான ஒரு பெயர் வரலாறு என்னும் பாடல் ஆறரை மணி அளவில் வெளியாக நிலையில் தற்போது மணி 7:30 மணி நேரமே ஆகிறது. ரசிகனின் மத்தியில் இந்த பாடல் உடைய கமெண்ட்ஸ்கள் ஒரு மில்லியன் வியூ எஸ் தொட்டது என்று கூறப்படுகிறது. இதிலிருந்து தெரிகிறது விஜயின் வெறித்தனமான ரசிகர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று.
"திரைக்களத்தில் வரலாறு படைத்தவன்!.
அரசியல் எனும் போர்க்களத்தில் வரலாறை உடைக்கப் போகின்றவன்!.
வரலாறே இயக்கம் இவனைக் கண்டு.!
இவனைப்போல் ஒருவன் உலகில் எவன் உண்டு.":
விஜயின் வெறித்தனமான ரசிகர்களுக்கு அளவே இல்லாத வகையில் ஒருவன் ஒரு வெறித்தனமான கவிதையை எழுதி பதிவிட்டுள்ளார். இது வெறும் சேம்பிள் தான். இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறது. அந்தளவிற்கு ஜன நாயகனை கொண்டாடி வருகிறார்கள்.