Jana Nayagan Dance Rehearsals On Fire : ஜன நாயகன் படத்திற்காக தளபதி விஜய் வியர்வை சிந்தி டான்ஸ் ரிகர்ஷல் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் டான்ஸ் என்றாலே அது விஜய் தான் என்று ரசிகர்களால் மணிமகுடம் சுட்ட பட்டவர் தளபதி விஜய். ஓவ்வொரு பாடலுக்கும் Signature step இருக்கும். அப்பாடல் வெளியானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் Signature step ல் ரில்ஸ் செய்து அப்பாடலை வைப் செய்வார்கள்.
210
டான்ஸிற்கு உதாரணம் விஜய்
டான்ஸிற்கு உதாரணம் என்றால் அதற்கு விஜய்யைத்தான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். விஜய் என்றாலே டான்ஸ் என்று சினிமா பிரபலங்கள் மெச்சிப்பது உண்டு. அந்தளவிற்கு ஒரு முறை பார்த்துவிட்டால் டான்ஸ் ஸ்டெப்பை அப்படியே போட்டு பிரமிக்க வைப்பார் என்று சொல்வதுண்டு. ஏன் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.
310
தளபதி விஜய் டான்ஸ்
இதற்கு காரணம், அவரது டெடிகேஷன், கடின உழைப்பு மற்றும் முயற்சி ஆகியவை தான். இதற்கு சிறந்த உதாரணமாக வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு அவர் எந்தளவிற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது தொடர்பான புகைப்படங்கள் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
410
கேவிஎன் புரோடக்ஷன்ஸ்
ஆம், ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக விஜய் எடுத்துக் கொள்ளும் டான்ஸ் ரிகர்ஷல் தான் அவரை டான்ஸில் சிறந்த நடிகராக மாற்றியிருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜன நாயகன். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
510
ஜன நாயகன் டிரைலர்
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சினிமாவிலிருந்து விலகியுள்ளார். ஜன நாயகன் படமே தனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளர். ஆதலால் இந்தப் படத்தை தனது அரசியல் பிரச்சார படமாக பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது.
610
ஜன நாயகன் டீசர் அல்லது டிரைலர்
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே (கயல் என்ற கதாபாத்திரம்), பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேன, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், ரேவதி, நிழல்கள் ரவி, சித்தார்த், அர்ஜூன் ராம்பால், சமுத்திரக்கனி, அனுஷ்கா சர்மா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளதாக விக்கிப்பீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
710
ஜன நாயகன் தளபதி கச்சேரி பாடல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள தளபதி கச்சேரி என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வைபானது. அதற்கு முக்கிய பங்கு விஜய்யின் டான்ஸ் தான். பாடலின் வரிகளுக்கு ஏற்ப டான்ஸ் ஆடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். அதற்கு விஜய் எடுக்கும் டான்ஸ் பிராடிக்ஸ் தான்.
810
தளபதி விஜய் டான்ஸ் ரிகர்ஷல்
விஜயின் பனியில் சென்றால் வெறித்தனமான பிராடிக்ஸாக இருக்கும். வியர்வை சொட்ட சொட்ட பாடல்களுக்கு பிராடிக்ஸ் செய்வார் தளபதி விஜய். ஒன்று அல்லது இரண்டு டேக்குகளில் டான்ஸ் ஆடி முடிப்பார் என சினிமா நடன இயக்குனர்கள் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
910
ஜன நாயகன்
சம்பள பிரச்சனை காரணமாக இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் முடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் டப்பிங் பணிகளை விஜய் மட்டுமின்றி பூஜா ஹெக்டேவும் முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
1010
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.