அஞ்சலியின் ஸ்லிம் ஃபிட் ரகசியம் இது தானா..? தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி யோகாவில் அசத்துறாங்களே..!

Published : Sep 09, 2021, 08:25 PM IST

நடிகை அஞ்சலி கொழுக்கு முழுக்கு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், தற்போது செம்ம ஸ்லிம் ஃபிட்டாக மாறி, நச்சுனு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஃபிட்னஸ்சை மெயின்டைன் பண்ண, தலைகீழாக செய்யும் யோகா பயிற்சிகள் குறித்த புகைப்படம் குறித்த தொகுப்பு இதோ... 

PREV
18
அஞ்சலியின் ஸ்லிம் ஃபிட் ரகசியம் இது தானா..? தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி யோகாவில் அசத்துறாங்களே..!

தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

28

அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

38

அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

48

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

58

இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

68

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலி மளமளவென தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்தார்.

78

தன்னுடைய உடல் எடையை இவர் குறைக்க பல்வேறு உடல் பயிற்சிகள் மட்டும் இன்றி, சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வரும், தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் முறையையும் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

88

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வக்கீல் சாப் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஷங்கர் - ராம் சரண் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories